
என்னை பற்றிய ஒரு சுய அறிமுகம்.
“கோமகள் குமுதா” என்னும் பெயரில் கவிதைகள் வரலாற்று சமூக புதினங்கள், மற்றும் ஆய்வு கட்டுரைகள் பல எழுதி வருகிறேன்.
வலைதளத்தில் இயங்கும் முகநூல் குழுமங்கள் பலவற்றில் எண்ணற்ற கவிதைகள் எழுதி பல வெற்றிகளையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளேன்.மாதாந்திர பல்சுவை இதழான உதயத்தில் தன் முதல் கவிதையை வெளிவந்தது.
பல தேசிய மற்றும் பன்னாட்டு கருத்தரங்குகளுக்கு தமிழ் கவிதைகளையும் தமிழர் வரலாறு சார்ந்த விஷயங்களையும் கட்டுரைகளாக எழுதி சமர்பித்திருக்கிறேன்.
என்னுடைய எழுத்துப் பணிகுறித்து உள்ளூர் வானொலி மற்றும் தொலைக்காட்சி யில் நேர்காணல் ஒலிபரப்பானது. நான் எழுதிய
கௌசிகா, மங்காதேவி, அருண்மொழி சந்திரமல்லி என்ற மூன்று வரலாற்று புதினங்களை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
மேலும் வலைதளங்களில் இயங்கும் பல மின்னிதழ்களில் சிறுகதைகளும் தொடர்கதைகளும் எழுதி வருகிறேன்
“மல்லிகை மழை” எனது முதல் கவிதை தொகுப்பு அமேசான் கிண்டிலில் இணையத்தில் வெளியிட்டுள்ளேன்.