
“செண்பா செண்பா எங்கேடிபோனே? இங்கேவா. நான் தேய்க்கிறேன். நீ தண்ணிய வாளிலே மொண்டு ஊத்துபாப்பா. எனக்கு கொஞ்சம் தலைசுத்துதடி கண்ணு. அம்மாவுக்கு கொஞ்சம் உதவி செய்டி என் ராசாத்தி.” என்று ஐந்தாம் வகுப்பு படிக்கும் தன் மகளை குடும்பம் முழுவதும் காலங்காலமாக பல தலைமுறைகளாக ஊழியம் செய்யும் அந்த தோட்டத்து வீட்டின் கழிப்பறையில் நின்றபடி வேலம்மாள் கூவி அழைத்தாள்.
தென்னந்தோப்பில் உள்ள மொத்த விவசாய வேலைகளையும் வேலம்மாளின் கணவன் காத்தப்பனும் மகன் ரங்கனும் கவனித்துக் கொள்கிறார்கள். எஜமானரின் வீட்டுவேலைகள் அனைத்தும் வேலம்மாவும் அவளுடைய மாமியாரும் கூடமாட ஒத்தாசைக்கு மாமனாரும் சேர்ந்து செய்தார்கள்.
“டேய்காத்தா இன்னிக்கி டவுன்லே இருக்கிற நம்மட தம்பி வூட்லே செப்டிக்டேங்க் கிளீன் பண்ணிரு. உன்ற அப்பனையும் மகனையும் கூட்டிகிட்டு ராத்திரிக்கு அங்கேபோயிறு. போகும் போது அவிகவூட்டு கேட்டுச்சாவிய வாங்கிட்டு போடா. அவுங்க எல்லாம் திருப்பதிக்கு போயிருக்காங்க. திரும்பி வர ஒரு வாரமாகும். அவுங்க வரதுக்குள்ளே அந்த வேலைய முடிச்சுப்போடு. என்னடா நாஞ்சொல்றது. மசமசன்னு நிக்காம வெரசா கிளம்புடா” என்றார் காத்தப்பனின் எஜமான்சிங்காரம்.
ஒன்றும் பேசாமல் தலையை சொறிந்தபடி நின்றவனை பார்த்து “என்னடாதலயச்சொறியறவேன். வாயத்தொறந்துபேசித்தொலையேன். பணம்கிணம் வேணுமாடா? “ என்று சற்று கோபத்துடன் கத்திய தன் எஜமானிடம் “ ஐயா அதெல்லாம் ஒன்னுமில்லைங்கசாமி. தொட்டியிலே எறங்குறதுக்கு முன்னாடி சாப்பிடற மருந்தும் உடம்பிலே தேய்க்கிறதுக்கு உப்பும் வேப்பெண்ணையும் வாங்கனுங்கசாமி” என்று துண்டைஇடுப்பில்கட்டிக்கொண்டுவளைந்துகுனிந்துஎஜமானின்கால்களைப்பார்த்தபடிமெதுவாககேட்டான்காத்தப்பன்.
“அதானேஎங்கடாசாராயங்குடிக்கிறதுக்குபணம்கேட்கலையேன்னுபார்த்தேன். நீயும் உங்கொப்பனும் இப்டிகுடிச்சேஎன்சொத்தைஅழிச்சுப்போடுவிங்கடா. எத்தனைகுடுத்தாலும்உங்களுக்கெல்லாம்பத்தாதுடா. நாங்களும்தலைமுறைதலைமுறையாநீங்கநல்லாஇருக்கோனுமின்னுதங்கறதுக்குதிங்கறதுக்குஉடுத்தறுதுக்குஇப்பபுதுசாஉம்புள்ளையபள்ளிக்கோடத்துக்குஅனுப்புறதுக்குஇப்டிஎத்தனைதண்டசெலவு. உங்ககுடும்பத்தைவச்சிகாப்பாத்தறதுஎன்றபரம்பரையோடகவுரவம்கிறதாலேஎம்மடதாத்தன்எம்மடஅப்பாருஇப்பநானு நாளைக்குஎம்மடமகன்இதைஒருதானமாக செய்யறோம். எம்மடபண்ணையத்திலேஉங்குடும்பமும்நீயும்இருக்கிறதுக்குஉன்பாட்டன் பூட்டான்யாரோபுண்ணியஞ்செஞ்சிருக்காங்கடா. அரிசியும்பருப்பும்விக்கிறவிலைக்குமூணுவேளைசோறும்துணிமணியுங்குடுத்துஇருக்கிறதுக்குஎடமும்குடுத்துவச்சிருக்கிறஎனக்குநீதினமும்கால்லேபூபோட்டுகும்பிடனும்.வூட்லேபெரியாத்தகிட்டேபோயிநாஞ்சொன்னேன்னுசொல்லிஐந்நூறுரூவாவாங்கிட்டுபோய்த்தொலை. நாளைக்குகாலையிலேவேலைமுடியலைதோலைஉரிச்சிருவேன்” என்றுமிரட்டிகாத்தனைஅனுப்பினார்எஜமான்.
காத்தன்எஜமானரின்பங்களாவின்பின்னாலிருக்கும்குப்பைக்குழியைத்தாண்டிகழிவறைக்குள்ஓடினான். வேலாயிஎங்கடிஇருக்கேஎன்றதன்கணவனின்உற்சாகமான குரல்கேட்டுகழிப்பறையைசுத்தம்செய்துகொண்டிருந்தகாத்தனின்மனைவி“ என்னஅதிசயமாஇருக்கு! என்னஇம்புட்டுசந்தோஷம்? சின்னபுள்ளைகணக்காதுள்ளிகிட்டுவாரிரு. வழுக்கிஉளுந்திடாதைய்யா” என்றுதன்கணவனைகீழேவிழுந்துவிடாமலிருக்கஎச்சரித்தாள்வேலம்மா.
தண்ணித்தொட்டியிலிருந்துதண்ணீரைவாளியில்மொண்டுபிஞ்சுக்கைகளால்தூக்கமுடியாமல்தூக்கியபடிவந்ததன்செல்லமகளைப்பார்த்துபதறியபடி“ஏஞ்சாமிநீஎதுக்குஇங்கேவந்தே? ஏண்டிஉனக்குஎத்தனசலக்காநான்சொல்லிஇருக்கேன். என்றசெண்பாகுட்டியைஇந்தவேலைக்குகூட்டியாரவேண்டான்னு” என்றுகுரலில் அன்புதுலங்கதன்மனைவியைகடிந்தான் காத்தப்பன். “ அப்பாஅம்மாவுக்குகாய்ச்சல்பா. ரொம்பமுடியலை. நான்தான்அம்மாவுக்குஉதவிசெய்யவந்தேன். அம்மாவைதிட்டாதிங்கஅப்பா” என்றுதன்னிடம்மெல்லகுயில்போல் மிழற்றியமகளைப்பார்த்துஅவள்கையிலிருந்ததண்ணீர்வாளியைபிடுங்கிவேலம்மாகழிப்பறையைசுத்தம்செய்யதண்ணீர்ஊற்றினான்காத்தன்.மகள்மேல்அளப்பரியஅன்பைப்பொழியும்தன்கணவனின்செய்கையைஎண்ணிசற்றுபொறாமையுடன்சிரித்துக்கொண்டேதன்உடல்உபாதையும்மறந்துதேய்த்துகழுவிதன்வேலையைமுடித்தாள்வேலம்மா.
அடியேகுழந்தையகூட்டிட்டுடவுனுக்குபோயிஅவபோனமாசம்கேட்டபொஸ்தகத்தைவாங்கிகுடு. புள்ளைக்குதிங்கறதுக்குஏதாவதுதீனிவாங்கிகுடு. நீயும்அங்கிருக்கிறஅஞ்சுரூவாடாக்டர்கிட்டேபோய்ஊசிகீசிபோட்டுக்கபுள்ளை. ஆத்தாவும்மகளும்டவுனுக்குகிளம்பிபோறதுக்குவீட்டுக்குபோய்ரெடியாகுங்க. நான்போய்பெரியாத்தாகிட்டேபணத்தைவாங்கிட்டுஓடியாறேன். செண்பா கண்ணுராசாத்திஅம்மா கூடடவுனுக்குபோறியா? போய்வெரசாபுறப்படுங்கஎன்றுமகளையும்மனைவியையும்மகிழ்ச்சியோடுவிரட்டினான்காத்தப்பன்.
காத்தப்பன்மகளையும்மகனையும்அரசுப்பள்ளியில்சேர்த்திருந்தான்.ரங்கனுக்குபடிப்பில்அவ்வளவாகஆர்வமில்லை.கையெழுத்துபோடுமளவிற்க்குபடித்தவன்பின்னர்பள்ளிக்குசெல்லாமல்தன்தந்தைக்குஉதவியாகஇருந்துபண்ணைவேலைகளைவேகமாககற்றுக்கொண்டான் ஆனால்மகள்செண்பாவோநன்றாகபடித்துபள்ளியில்சிறந்தமாணவியாகவிளங்கினாள். அதனால்செண்பாவைபடிக்கவைக்ககாத்தன்மிகவும்சிரமமானஅபாயகரமானவேலைகளைகூடதானேமுன்வந்துசெய்தான்.
காத்தன்தன்மகனுக்குஎல்லாவேலைகளையும்கற்றுக்கொடுத்தான். ஆனால்ஒரேஒருவேலையைமட்டும்தன்மகன்செய்யக்கூடாதுஎன்றுதானும்தன்தந்தையும்மட்டும்சேர்ந்துசெய்துவந்தான்.
அந்தவேலையைத்தான்இன்றுசெய்யதன்தந்தையையும்மகனையும்அழைத்துக்கொண்டுஇரவுடவுனில் இருக்கும் எஜமானின்தம்பிவீட்டுக்குபுறப்பட்டான். பள்ளிக்கு அனுப்புவதை எஜமான்பலமுறைஆட்சேபித்தும்தன்மகளைபடிக்கவைப்பதிலும்மகனை கழிவுநீர்த்தொட்டி சுத்தம் செய்யும் வேலைக்கு எஜமான் பலமுறை அதட்டியும்மிரட்டியும்கூறினாலும்ரங்கனைஅந்தவேலையில்மட்டும்ஈடுபடுத்தாமல்எப்படியோஎஜமானை சமாளித்துவந்தான்காத்தன்.
எஜமான்குறைந்தது ஆறுமாதங்களுக்குஒருமுறைஉறவினர்கள்நண்பர்கள்வீட்டுக்குகழிவுநீர்தொட்டியைசுத்தம்செய்யதோட்டத்தைவிட்டுவெளியேஅனுப்புவார். இதுபோன்றவேலைகளைசெய்யச்செல்லும்பொழுதுரங்கனை அழைத்துச்சென்றுஅவன்விரும்பியஉணவைஹோட்டலில்வாங்கிகொடுத்துவேலைசெய்யும்வீட்டின்திண்ணையில் படுத்துதூங்கவைத்துவிடுவான். அன்றும்ரங்கன்தூங்கியபிறகுகாத்தப்பன்அங்கேயேதன்தந்தையைகாவலாகஅமர்த்தி விட்டு டவுனிலிருந்துஇரண்டுமைல்தொலைவில்பாழடைந்தகாளிகோயிலுக்குஅருகிலிருந்தகாட்டில்சாராயம்காய்ச்சும்முனியனிடம்சென்றுநாலுபாட்டில்வாங்கிக்கொண்டுகடையில்ஏற்கனவேவாங்கிமூட்டைகட்டிவைத்திருந்தகல்லுப்பையும்வேப்பெண்ணையையும்எடுத்துக்கொண்டுடவுன்வீட்டிற்க்குத்திரும்பினான். தோட்டத்திலிருந்துபுறப்பட்டபோதுகொண்டு வந்திருந்த கடப்பாரை, கயிறு, ஏணி, மலம்அள்ளும் இரும்புவாளிகள், மலத்தைகொட்டிஎடுத்துச்செல்லஇரும்பாலானமூடிபோட்ட பெட்டிபோன்றதள்ளுவண்டிஎல்லாவற்றையும்எடுத்துகழிவுநீர்த்தொட்டிக்குபக்கத்தில்வைத்தான். ஒருவாளியில்உப்பையும்வேப்பெண்ணையும்கலந்துஉடம்புமுழுவதும்பூசிக்கொண்டுதூங்கும் மகன்எழும்பாமல் மெதுவாக தன்தகப்பனைஎழுப்பினான்காத்தன்.
திடீரென்றுகழிவுநீர்த்தொட்டிஅருகில்எரிந்துகொண்டிருந்தமின்விளக்குஅணைந்தது.இருளில்ஒன்றும்தெரியாமல்சற்றுநேரத்தில்கண்கள்அரைவெளிச்சமாகஇருந்தநிலவொளிக்குபழகிப்போனது. நிலாவெளிச்சம்போறதுகுள்ளகிளீனிங் வேலைமுடிஞ்சுடும் என்றுமனதைசமாதானம்செய்துகொண்டான்காத்தப்பன்.
“ அப்பாஇந்தவாளிக்குள்ளேஉப்பு கலந்த வேப்பெண்ணைஇருக்கு. உடம்புமுச்சூடும்எடுத்து பூசிக்கோ. நான்தொட்டிக்குள்ளேஎறங்கிஅள்ளித்தாரேன். நீமேலேநின்று அந்ததள்ளுவண்டிலேவாங்கிக் கொட்டு” என்றான்காத்தப்பன். “ காத்தா எஞ்சாமிநாஎறங்கிஅள்ளித்தரேன்பா. நீவாங்கிவண்டிலேகொட்டுடா” என்றுதன்மகன்கழிவுநீர்க் தொட்டிக்குள்இறங்குவதைதடுத்தான்தகப்பன்.
“ ஏம்பாஎனக்குஏதாவதுஆயிடும்னுபயப்படுறியா? ஒன்னும்ஆகாது. உன்னாலேரொம்பநேரம்மூச்சுபுடுச்சுதொட்டிக்குள்ளேநிக்கமுடியாதுப்பா. ஏற்கனவேகைகாலெல்லாம்நடுங்குது.நீபேசாமதுண்டைமூஞ்சிலே மூக்குவாயைமூடி இறுக்கிஇழுத்துகட்டிக்கோ. ஒருபாட்டில்சாராயம்இப்பக்குடி.கிளீன் பண்ணினப்புறம்இன்னொன்னுகுடிப்பா” என்றுதன்தகப்பனைஎச்சரித்தான்காத்தப்பன்.
குடிப்பழக்கமேஇல்லாதகாத்தப்பன்வேறுவழியில்லாமல்மூக்கைப்பிடித்துக்கொண்டுதானும்ஒருபாட்டில்சாராயத்தை குடித்தான். பிளாஸ்டிக்கவர்ஒன்றைதலையில் கவிழ்த்துமுகத்தைமலநெடியிலிருந்துகாத்துக்கொள்ளகழுத்தைவரைஇறக்கிமுகமூடிபோல் அணிந்துகயிற்றால்கழுத்தைச்சுற்றிகட்டிக்கொண்டான்.
வீடுகட்டியதிலிருந்து இருபது வருடங்களாகதிறக்கமுடியாதபடிசிமெண்ட்பூசிஅடைத்திருந்த கழிவுநீர்த்தொட்டியின்மூடியைகடப்பாரையால்குத்திநெம்பித்திறந்தான். மூடிஅதிககனமாகஇருந்ததால்இருவரும்சேர்ந்துமூடியைநகர்த்திசுவரோடுசாய்த்துவைத்தனர். கரப்பான்களும்புழுக்களும்குபுகுபுவென்றுவெளியேவரத்துவங்கியது.காத்தன்தான்கொண்டுவந்திருந்தபூச்சிக்கொல்லிமருந்தைஅடித்தான். இரும்புஏணியைஎடுத்துதொட்டிக்குள்சாய்வாகவைத்துஇறங்கினான். மடமடவென்றுமலத்தைஅள்ளி வாளியில் நிரப்பிமேலேநின்ற தன்தகப்பனிடம்கொடுத்தான். ஒருமணிநேரத்திற்குபின்னர்சற்றுவெளிக்காற்றைசுவாசிக்கமேலேவந்துதன்முகத்தைமூடியிருந்தபிளாஸ்டிக்உறையைகழற்றிதொட்டியின்மேல்தரையில்படுத்துக்கொண்டான். இப்படியேஇருவரும்நான்குமுறைஓய்வெடுத்துவேலையைத்தொடர்ந்தனர். அதிகாலைமூன்றுமணிசாராயத்தின்வீரியம்குறைய ஆரம்பித்ததைமூக்கைத்துளைத்தநெடியிலிருந்து அறிந்தான்காத்தப்பன்.
“ அப்பா அந்தரெண்டாவதுபாட்டிலையும்எடுகுடிச்சிடலாம். இன்னும்பாதிதொட்டிஇருக்குநெடிதாங்கமுடியலைஎன்றுஒக்களித்தான்காத்தன். சரிசாமிஎன்றுகூறிஎடுத்துகொடுத்துகுடித்ததும்நிற்கமுடியாமல்தள்ளாடினார்காத்தனின்தந்தை.
அவர்நிலையைக்கண்டு“ அப்பாநீகொஞ்சம் நேரம்படுத்துக்கோ. நானேஅள்ளிநானேவண்டிலேகொட்டிக்கிறேன்“ என்றகாத்தன்தானேஅள்ளுவதும்ஏறிவந்துதானேகொட்டுவதுமாகவேலையைத்தொடர்ந்தான். அதிகாலைஐந்துமணிநிலாவெளிச்சம்மறைந்தது.கருக்கல்மையிருட்டுகண்களுக்குஎதுவுமேதெரியவில்லை. அனிச்சைசெயல்போலஅள்ளுவதும்கொட்டுவதுமாகஇருந்தகாத்தன்முகத்தில்கவிழ்த்திருந்தபிளாஸ்டிக்உறையின்வெளியேமலம்அப்பிக்கொண்டதால்பார்க்கமுடியாமல்ஏணியின்மேல்ஏறிக் கொண்டிருந்த காத்தன்கால்வழுக்கிதலைசுவற்றில்மோதிமயங்கிதன்நினைவைஇழந்துகழிவுநீர்த்தொட்டிக்குள்விழுந்தான்.
திடீரென்றுமயக்கம்சற்றுதெளிந்தகாத்தனின்தகப்பனுக்குநிசப்தமானஅந்தஇருளடர்ந்தகருக்கல்வேளைஏதோஅசம்பாவிதம்நடந்திருப்பதாகஉள்ளுணர்வில்தோன்றியது. இருளில்ஒன்றும்கண்ணுக்குபுலப்படாததால்தரையில்தவழ்ந்ததபடிகைகளால்தடவிக்கொண்டுகழிவுநீர்த்தொட்டிதிறந்திருந்தஇடத்தைநெருங்கியதும்கைகளுக்குஏணிதட்டுப்பட்டதும்தொட்டிக்குள்குனிந்து “காத்தாகாத்தா எங்கசாமிஇருக்குறே” என்றுகேட்டுக்கொண்டேமெல்லஏணியில்கால்வைத்துஇறங்கமுயன்றகாத்தப்பனின்தந்தைகால்நடுங்கிஇடறிகழிவுநீர்த்தொட்டிக்குள்தானும் தலைகுப்புறவிழுந்தான்.
மனிதனேமனிதனின்மலத்தைஅள்ளும்இந்தப் பணியை நிறுத்தஅரசாங்கம்எத்தனைசட்டங்கள்போட்டுதடுத்தாலும்பயனில்லை. அதனால்என்தந்தையைப்போல்தாத்தாவைப்போல்ஆயிரமாயிரம்மனிதஉயிர்களைகாப்பாற்றநான்கண்டுபிடித்தபுதிய எளிமையானஅதிகம்பணச்செலவில்லாமல்மிகக்குறைந்தசெலவில்செய்த“ரோபோகாத்தப்பன்” என்றஇந்தஎன்புதியதொழில்நுட்ப இயந்திரத்தை உலகமக்களின்நன்மைக்காகஇலவசமாகஅர்ப்பணிக்கிறேன்.இந்தரோபோவைஉலகநாடுகள்அனைத்தும்பயன்படுத்தி என்வீட்டுஉறவுகளைநான்இழந்ததுபோல்வேறுஎவரும்இழக்காமல் தடுக்கஆவனசெய்யவேண்டும்” என்றுசர்வதேசமக்கள்சபையில்செண்பகம்வேண்டுகோள்விடுத்தாள்.
விஞ்ஞானிசெண்பகாவின்வேண்டுகோளைஇந்தசர்வதேசமக்கள்நலம்காக்கும்சபைஏற்றுக்கொள்கிறது. மேலும்அவரதுமக்கள்பணியைமதித்துஇந்திய விஞ்ஞானி செண்பகாவிற்க்கு “ சிறந்த மக்கள் நலம் காக்கும் விஞ்ஞானி“ என்ற சர்வதேச விருதை வழங்கி கௌரவித்தார்கள்.
ஆக்கம்
கோமகள்குமுதா.