
இந்த ரோஜாக்களை எனக்கு பிடிக்கவில்லை
எப்பொழுதும் அவை உன் கையிலிருப்பதால்
நிலவையும் நான் விரும்பவில்லை
நான் அருகில் இல்லாத போது நீ அதையே உற்றுப் பார்ப்பதால்
நித்திரையை அடியோடு பிடிக்கவில்லை எனக்கு
கனவில் நீ தரும் முத்தங்களின் சுவையை உணர முடியாததால்.
என் மனத் தோட்டத்தைத் திறந்து காதல் பயிர் செய்ய இனி யாராலும் முடியாது
அன்பே காற்றாக வா என் காதலா உன்னை சுவாசித்தே வாழ்ந்திடுவேன் உயிர் உள்ளவரை
இது காதல்.
கோமகள் குமுதா