
புகாரின் சுங்கச் சாவடியில் வந்திறங்கிய நிமிர்ப்புரவி நெடுங்கிள்ளி அவன்.
காதலை கருங்கறி(மிளகு ) மூடையைப் போல ஏற்றிக் கொண்டுவந்த கொங்கு வேந்தன் கோவன் அவன்
வடமலைப் பிறந்த பொன்னும் மணியும் போரில் வென்று அள்ளி வந்த கரிகாற்சோழனவன்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
வாரிக் கொண்டு வந்திருக்கும் வள்ளல் அவன்
புகாரின் சதுக்க பூதம் போல வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறேன் வஞ்சி நானும் காதலுடன் ………..
இது காதல்
பட்டினப்பாலைக் காதல்.
கோமகள் குமுதா