மாங்காத் தோப்பிலே
திருடின மாங்காயை
மாத்தி மாத்தி
கடிச்சோமே மறந்து போச்சா மாமன் மகளே//
தென்னந் தோப்புக்குள்ளே
தெம்மாங்கு பாடிகிட்டு திரிஞ்சோமே நினைவிருக்கா//
கரும்புக் காட்டுக்குள்ளே
அடிக்கரும்பை நாங்கடிக்க //
நுனிக்கரும்பை நீ கடிக்க என்
மனசெல்லாம் சித்தெறும்பா நீ கடிச்சே//
மாரியம்மன் கோயிலுக்கு முளப்பாரி
உன் தலைமேல
என் மனசெல்லாம்
பொன்மாரி உன் மேல
பூவாக பூத்த உனக்கு பச்சை ஓலைக்குடிசை கட்ட
என் பங்காளிகூட பானிபட்டு யுத்தமே நடந்துச்சே
நாஞ் செயிக்க நீ சிரிச்ச என் மனசெல்லாம் மத்தாப்பூ
பரிசம் போட வந்தேன் பாரிசாதப்பூ உனக்கு
சித்தகத்திக் கண்ணாலே ஒரு தடவை நீ பார்த்தே என் மனசு பறந்ததடி
பாதகத்தி நீ பார்க்காத பொழுதெல்லாம் என்னுசுரு உருகுதடி
கோமகள் குமுதா