அகநானூறு புற நானூறு படிச்சதில்லே
அடி தொடை சீர் தளை பா பிரிச்சதில்லே
எதுகை மோனை
எப்பவுமே என் பேச்சிலே இல்லே
வள வள ன்னு
சல சல ன்னு
பொல பொல ன்னு என் மனசைக் கொட்டிட்டேன்.
தட தட ன்னு ரயில் வண்டி ஓடுதே நீ கல கல ன்னு சிரிச்சாலே.
மச மச ன்னு நிக்காமே
கட கட ன்னு என் காதலுக்கு பச்சைக் கொடி காட்டு என் குறுந்தொகையே
குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கித் தாரேன் நான் உனக்கு
உன் சித்தகத்தி கண்ணாலே ஓரமா ஒரு தடவை பாரடி என் பாதகத்தி.
கோமகள் குமுதா