


நானும் ஒரு தடகள விளையாட்டுப் பெண் என்ற நோக்கில் நீரஜின் ஜாவலின் த்ரோவை அவ்வளவு ரசிச்சேன். நான் பள்ளி நாட்களிலிருந்து சாட்புட் ,டிஸ்க், ஜாவலின் எல்லாத்திலும் வின்னர். கிரவுண்டிலே இறங்கி விளையாடுறவங்களுக்கு தான் விளையாட்டின் பெருமை அருமை தெரியும். பார்வையாளர்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம். ஒரு டீமாக விளையாடும் கபடி, வாலிபால் விளையாட்டை BSNL நேசனல் லெவலில் எப்பொழுதும் நம்ம தமிழ்நாடு தான் சாம்பியன். ஒலிம்பிக்ஸ்சில் நம்ம தமிழ்நாட்டு பெண்கள் ஓடினதை பார்க்கும் போது நான் அதை வானளவு பெருமையாக உணர்ந்தேன். ஒரு முறை BSNL sports meet கேரளாவில் கோட்டயத்தில் நடந்த போது 4*100மீ ரிலே ரேசில்( எப்பொழுதும் நான் தான் first leg) எங்க டீமைச் சேர்ந்த ஒரு பொண்ணு ரெண்டாவது லெக் ஓடும் போது கால் சுளுக்கி கொஞ்சம் மெதுவா நடந்து போய் மூணாவது ஆளுகிட்டே ரிலே கட்டையை கொடுத்தாங்க. அதே மாதிரி ஆந்திரா டீமைச் சேர்ந்த பெண் ரிலே கட்டையை கீழே போட்டு மறுபடியும் எடுத்திட்டு போய் 3rd leg ஆளுகிட்ட கொடுத்திட்டாங்க. ரெண்டு டீமும் தவறு செய்ததால் யார் செய்த தவறு ஏற்க முடியாதது என்று அம்பயர்கள் முடிவு செய்து ஆந்திரா டீமுக்கு மூன்றாவது இடத்தை கொடுத்தார்கள். நாங்க விரைவாக ஓடி இரண்டாவது இடத்தை பிடித்தும் ரேசின் நடுவே ஓடாமல் நடந்தது பெரிய தவறுன்னு தமிழ்நாடு டீமை டிஸ்குவாலிஃபை செய்தாங்க. நாங்க எப்படி அழுதோம்ங்கிறது நினைவு வந்து நம்ம பொண்ணுங்க ஒலிம்பிக்கில் ஓடி நான்காவது வந்தப்ப அதை பார்த்த எனக்கு கண்ணிலே தண்ணியே வந்திடுச்சு. நானே ஓடினா மாதிரி விக்கி விக்கி அழுதேன். விளையாடினவங்களுக்கு தான் தெரியும் அதிலே பங்கேற்பதே எவ்வளவு பெரிய விஷயம்ன்னு. ஜெயிக்கிறதெல்லாம் அப்புறந்தானுங்க.🙏🙏🙏😊😊
கோமகள் குமுதா