பச்சரிசி பல்லழகி
என்றாய் தஞ்சைத்தரணி ஆண்ட சோழனா நீ?
வீரமாய் நான் தழுவும் புருவ வில்லழகி என்றாய்
மலைநாட்டரசன் சேரனா நீ ?
முத்துசிப்பி கவிழ்த்து வைத்த கண்ணழகி என்றாய் மதுரையாண்ட பாண்டியனா நீ?
தேனூறும் கொவ்வைச் செவ்வாயழகி என்றாய் கொங்கு வேந்தனா நீ ?
தங்கச்சிலையே என் மதி மயங்குதடி சிற்பமே என்கிறாய்
பல்லவனா நீ
கவிதை சொல்லி காதல் கதைகள் பேசும்கவிஞனா ?
யாரடா நீ ?
உனக்காகவே கைகளில்
பைந்தமிழ் மாலையுடன் காத்திருக்கிறேன்
மண்ணின் மகள் …..
கோமகள் குமுதா