

என் முதல் வரலாற்று நாவலுக்கு நான் “கௌசிகா” என்று பெயரிட காரணம் என்ன தெரியுமா நட்பூக்களே?
அரசாங்க ஏடுகளிலிருந்தே
மறைந்து போன கொங்கு மண்ணை வளப்படுத்திய “கௌசிகா” என்ற நதி தான் என் கதையின் நாயகி. கௌசிகாவை மீண்டும் மண்ணில் பாய்ந்தோடச் செய்ய அரும்பாடுபடும் முனைவர் தமிழ்ப் பேராசிரியர் திருவாளர் இரவி தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகம், கௌசிகா நதி சகோதரர் செல்வராஜ் இன்னும் முகம் தெரியாத பலர் கௌசிகா நதியை மீட்டெடுக்க தொடர்ந்து போராடுகிறார்கள்.
இதை பத்திரிக்கைகள் வாயிலாக படித்து அறிந்ததும் என்னால் இயன்ற காரியமாக கௌசிகா நதியை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த நான் எழுதிய வரலாற்று நாவல் தான் “கௌசிகா”
நமது முன்னோர்கள் நீர் நிலைகளை உருவாக்குவதிலும் பாதுகாப்பதிலும் தங்கள் தலையாய கடமையாக எண்ணி திறம்பட அந்தப் பணிகளை செய்தனர். நமது பண்டையத் தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களும் நீர் நிலைகளை காப்பவர் களையும் உருவாக்கிய வர்களையும் அதற்காக நிதியளித்த வர்களையும் தங்கள் கடவுளுக்கும் மேலாக கருதி அவர்கள் பாதங்களை தம் சென்னியில் தாங்குவதாகப் போற்றி கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் பொறித்தனர்.
நீர்நிலைகள் ஆறுகள் ஏரிகள் குளங்கள் இவற்றை பாதுகாப்பது மனிதனாக பிறந்த ஒவ்வொருவரின் கடமை. நம்மால் இயன்ற வரை உருவாக்க இயலவில்லை என்றாலும் இருப்பதை காப்பாற்றி நம் வருங்கால சந்ததிகளுக்கு அளிப்போம் மக்களே.🙏🙏.
தற்போதைய நாளிதழ்களில் கௌசிகா நதி மீண்டும் பாய்ந்தோட நமது அரசு ஆவண செய்கிறது என்ற செய்தி நிஜமாகவே தேனாக வந்து பாய்கிறது. அரும்பாடு படும் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.♥️🙏🙏
கோமகள் குமுதா