கூடி வாழ்ந்தால் கோடி நன்மை அன்று
கூடினாலே வரும் கோடித் தீமை கொரோனா இன்று
தீண்டாமை பெரும்பாவம் அன்று
தீண்டினாலே பற்றும் பெரும் நோய் இன்று
கொஞ்சிப் பேசினால் முத்தமிட்டால் காதல் வைரஸ் வரும் அன்று
கொஞ்சம் அருகில் நின்று பார்த்தால் வரும் கொரானோ வைரஸ் இன்று
உலகம் ஒரே கிரகம் அன்று
நீ மட்டும் தனி கிரகம் இன்று
தும்மினால் ஆயுசு நூறு என்பார் அன்று
தும்மினால் ஆயுசு போச்சு என்பார் இன்று
கட்டிப்பிடித்து கைகுலுக்குவது நாகரீகம் அன்று
தள்ளி நின்று கரங்கூப்பி வணங்குவது நாகரீகம் இன்று
வீட்டுக்கு விலக்கானால் தீட்டு என்றனர் அன்று
வீட்டை விட்டு விலகினால் போட்டுத் தாக்கு என்றனர் இன்று
விருந்தாளியை இறைவன் என்றார் அன்று
வீட்டுக்கு யார் புதிதாக வந்தாலும் யமன் என்றார் இன்று
சகலலோகங்களும் இறைவன் ஆட்சி அன்று
சர்வலோகமும் கொரோனா ஆட்சி இன்று
அமெரிக்காவும் இலண்டனும் இத்தாலியும் சொர்க்கம் அன்று
அவரவர் வீடு தான் சொர்க்கம் இன்று
கடவுள் காப்பார் அன்று
கருணையுள்ள மருத்துவர் தான் கடவுள் இன்று
கோமகள் குமுதா.