விள்வளைத்து வேல்விழியாளை மணந்தான் ராமன்.
விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபமாய் நின்ற ஈசனையே தன் வீணை நாதத்தால் வளைத்த சிவச்செல்வன் இராவணன்.
காதலினால் தன்னை பின்தொடர்ந்த மனையாளை மான் பிடிக்கப் போய் கானகத்தில் தொலைத்தவன் இராமன்.
பொன்மானை விட அழகான அந்தப் பெண்மானை கண்டதுமுதல் தன் கண்டம் நிலத்தில் விழும் வரை காதலித்தவன் இராவணன்.
வானரங்களின் தலைவன் வாலியைக் கூட நேரில் நின்று வீழ்த்தாமல் மறைந்து நின்று கொன்றவன் இராமன்.
விண்ணவரையும் தன் நெஞ்சுரத்தால் நேர் நின்று வெற்றி கொண்டவன் இராவணன்.
சந்திரவம்சத்தில் பிறந்து மனம்மயங்கி எடுப்பார் கைப்பிள்ளையாக சொல்புத்தி கொண்டவன் இராமன்.
சந்திரஹாசம் எனும் தன் வீரவாள் ஏந்தி சூரியனைப் போல் சுய புத்தியோடு வாழ்ந்தவன் இராவணன்.
மற்றவர்கள் போற்றி புகழ கருவுற்ற மனைவியையே கானகம் அனுப்பியவன் இராமன்.
உற்றார் உறவினர் தான் பெற்ற செல்வம் நற்பெயர் எல்லாவற்றையும் இழந்து இறுதியில் தான் ஒருதலைபட்சமாக விரும்பிய பெண்ணிற்காக தன் இன்னுயிரையும் ஈந்தான் இராவணன்.
காதலில் சிறந்தவன் காவியநாயகன் இராமனா ? இராவணனா?
என் மனதை ஈர்த்தவன் காதல் காவியநாயகன் இராவணன் .
கோமகள்குமுதா