சாமத்திலே யாருக்காக முற்றத்திலே ஏங்கி நிக்கிற துளசிச்செடியே
ஆறாம மனவலி தீராம
ஆடாம அசையாம ஏன் நிக்கிற முற்றத்து துளசிச்செடியே
விடிஞ்சா முடிவாயிடும்
வீணாப்போன பட்டணத்தாசையாலே
முற்றத்தை இடிச்சு அடுக்குமாடி கட்டப்போறான்
தண்ணீரில் மீனழுவது போல நீ அழுதாலும் தொழுதாலும்
தள்ளியா வைக்கப் போறான் துளசிச்செடியே
கடைசியா அழுதிடு
என் ஆசை முற்றத்து துளசிச்செடியே
கோமகள் குமுதா