உலகையே நடுநடுங்க வைத்தான் ஒருவன்
உலகையே சிரிசிரிக்க
வைத்தான் மற்றொருவன்
ஏழ்மையினால் வாடி
சமூகத்தை தன் காலடியில் நசுக்கி சர்வாதிகாரி ஆனான் ஒருவன்
ஏழ்மையில் வாழ்ந்தாலும் இல்லாதவர்க்கு இயன்றவரை உதவிசெய்து இதயங்களை திருடினான் மற்றொருவன்
இரக்கமற்ற அரக்கனையும் இதயமுருகி காதலித்தாள் ஈவா
இன்முகம் காட்டி துன்பமெல்லாம் மறைத்து மக்களை சிரிக்கவைத்த நல்லவனை காதலிக்க யாருமில்லே அதுபோல
கத்தி எடுத்தவன் கத்தியாலே இறந்தான்
துப்பாக்கியாலே சுட்டுக் தற்கொலை பண்ணிகிட்டான் பாவி ஹிட்லருந்தான்
கடகடன்னு ஆடிப்பாடி
கோமாளி ஆனாலும் மக்களின் மனங்களில்
மறையாமல் வாழ்கிறான் கோமகனாக என் பிரியமான சார்லி சாப்ளினுந்தான்.
கோமகள் குமுதா