
கமழும் நறுமணம் நீ உன் வண்ணமலர் நான்
உயிரோவியம் நீ உன்
உடலோவியம் நான்
இதய வானம் நீ உன்
வெண்ணிலவு நான்
மேனி தழுவும் தென்றல் நீ உன் மேரு பர்வதம் நான்
மனம் நனைத்த மழை நீ உன் மண்மகள் நான்
மானம் காக்கும் தமிழ்ச்சிப்பி நீ உன் முத்தழகி நான்
ஏர் சுமக்கும் உழவன் நீ உன் பொன்னேர் நான்
வாழ்வாதாரம் நீ உன் வாழ்வின் வளங்கள் நான்.
கோமகள் குமுதா