வாழ்க்கை நதி நீண்டது
வாங்கி வந்த காலம் ஓடுது
வந்ததெல்லாம் வரவென்றானது
போவதெல்லாம் செலவென்று போகுது
சிந்தனை மாறுது
சித்தம் கலங்குது
சிறுமதி தோற்குது
பெரும் விதி விளையாடுது
சல்லிக்காசு இல்லை என்றால் உயிர் இருந்தாலும் வாழ்க்கை ஊசலாடுது
சவமானாலும் சாதிப்பேய் ஆடுது
இறைவா இதுதான் விதியா
உணர்ந்ததால் நீயும் கல்லானாயோ!!!
விதி வலியது தானோ!!!
கோமகள் குமுதா