‘Romance is a bonus book ‘ என்ற கொரியன் தொடரில் கதை , கவிதை புத்தகங்களை வெளியிடும் பதிப்பகத்தாரின் கஷ்ட நஷ்டங்களை அழகாக ஒரு காதல் கதையுடன் கலந்து காண்பித்திருப்பார்கள். கவிதை நூல்களை வெளியிட்டு தொடர்ந்து புத்தகங்கள் விற்க முடியாமல் பதிப்பக உரிமையாளர் மிகவும் கஷ்டப்படுவார். கவிதை மட்டுமே எழுதிய அந்த கவிஞனும் வறுமையில் வாடி இறந்து விடுவான். தொடர்ந்து பதிப்பகத்திற்கு நஷ்டம் ஏற்பட்டதால் கவிதை புத்தகங்கள் வெளியிடுவதை பதிப்பக உரிமையாளர் நிறுத்தி விடுவார் . இந்த தொடரைப் பார்த்து தான் என் கவிதைத் தொகுப்பை நான் புத்தகமாக வெளியிடாமல் மின் நூலாக அமெசான் கிண்டிலில் 2019 மார்ச் மாதம் கனடாவில் இருந்த போது ” மல்லிகை மழை” என்ற பெயரில் வெளியிட்டேன். முகநூலில் அதை பதிவிட்டிருந்தேன். எவ்வளவு வேகமாக நாட்கள் ஓடி விட்டது. இனிமையான நினைவு பெட்டகத்திலிருந்து ( memories ) மீள் பதிவு.
Check this out: மல்லிகை மழை: கவிதைத் தொகுப்பு (Tamil Edition) by கோமகள் குமுதா https://www.amazon.ca/dp/B07RV5CH81/ref=cm_sw_r_wa_awdb_H4FD8F0BWDX2MHQJKRXM
http://www.komagalkumudha.com
