அழகான ஆண் தேவதைகள்

அழகான என் ஆண் தேவதைகள்.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

பிறந்ததும் ஆண் பிள்ளை அல்ல என்று மூன்று நாள் என் முகம் பாராது அதன்பின் என்னைச் செல்லமாய் ” ராஜா” என்று தன் மூச்சு நிற்கும் வரை கொஞ்சியும் அடித்தும் ஆளாக்கிய  அப்பா நான் கண்ட முதல் பேரழகான ஆண் தேவதை.❤️

மகன் பிறந்த போது அடைந்த இன்பத்தை விட நான் பிறந்த போது இருமடங்காக பேரின்பம் கொண்ட என் தாய் வழி தாத்தாவும் தந்தைவழி பாட்டனும் அழகான ஆண் தேவதைகள்.❤️❤️

அழுத போதெல்லாம் என் அன்னை  இல்லாத நேரங்களில் தாய் போல் சேலை உடுத்தி எனக்குப் புட்டிபால் கொடுத்த என் அம்மான்கள் மூவரும் அழகான ஆண் தேவதைகள்.❤️❤️❤️

அப்பா இல்லாத நேரங்களில் வெளியே அழைத்துச் சென்று பாதுகாப்பாய் எனைப் பார்த்துக் கொண்ட பெரிய சிறிய அப்பாக்கள் இருவரும் அழகான ஆண் தேவதைகள்.❤️❤️

என்னை விட வயதில் இளையவர்கள் என்றாலும் தந்தையும் தாயும் இறந்த போது என் இருபுறமும் நின்று தங்கள் தோள் சாய்த்து என்னை ஆற்றுபடுத்திய தம்பிகள் இருவரும்  அழகான  ஆண் தேவதைகள்.❤️❤️

சுற்றம் வேண்டாம்,  செல்வம், வசதி எதுவும் வேண்டாம் நீ மட்டும் உடனிருந்தால் போதும் என்று நான் காதலித்து கைபிடித்த என் அன்புக் கணவன் பேரழகான ஆண் தேவதை.❤️

உலகமே அழிந்தாலும் உன்னை விட்டுப் பிரிய மாட்டேன் என்ற என் ஆவிக்கிளி பிரிந்து பறந்த போது வண்ணங்களை இழந்த வானவில்லான எனக்கு வாழ்வின் வசந்தப் பூக்களாக  என் மடியில் தவழ்ந்த இரட்டை மகன்கள் இருவரும் பேரழகான ஆண் தேவதைகள்.❤️❤️

முகநூலில் என்னைத்  தங்கை என்றும், மகளே என்றும், அக்கா என்றும், அம்மா என்றும் தோழி என்றும், நட்பே என்றும் அழைத்து அன்பு காட்டும் அனைவரும் அழகான ஆண் தேவதைகள்.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

கோமகள் குமுதா

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: