கனடாவில் கிறிஸ்துமஸ் புத்தாண்டு விடுமுறை முடிந்து பனிப்பொழிவு 20 செ.மீ இருந்ததால் விடுமுறை மேலும் ஒரு வாரம் நீட்டித்து இன்று பள்ளிகள் திறந்தாயிற்று. மீண்டும் பள்ளியில் பல கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். மாஸ்க் கட்டாயம். இதைத் தவிர ஒவ்வொரு குழந்தையின் இருக்கையைச் சுற்றிலும் கனமான நெகிழித் தடுப்பு. அதற்குள் தனியாகத்தான் அமர்ந்து படிக்க, சாப்பிட வேண்டும். அவரவர் வீட்டிலிருந்து குடிநீர் கொண்டு வர வேண்டும். ஒருவருக்கொருவர் தொட்டுக் கொள்வது அருகில் அமர்ந்து பேசுவதற்கு தடை, குழந்தைகள் தங்கள் பொருட்களை வைத்துக் கொள்ளும் லாக்கர்களுக்கு பூட்டு இப்படி நிறைய கட்டுப்பாடுகள் விதித்து பள்ளிகள் திறக்கப் பட்டுள்ளது. எல்லாம் இந்த டெல்டா + ஓமைக்ரான் = டெமைக்ரான் என்ற வேரியன்டால் வந்த தொல்லை. எப்பொழுது தான் சாகுமோ இந்தக் கிருமி.😒😒

