சிறு வயதிலிருந்தே சில சில சரித்திர புதினங்களை படித்திருக்கிறேன். பெரும்பாலும் மன்னர்களின் ஆளுமை, வெற்றிகள், போர்தந்திரங்கள் குறித்தே அமையப் பெற்றிருக்கும். சில கதைகளில் மட்டுமே மாற்றங்கள் இருக்கும்.
அந்த வகையில் மாமன்னர் இராஜராஜரின் வாழ்க்கையில் நடந்த பல்வேறுபட்ட அனுபவங்களோடு…

குஞ்சரமல்லியோடு ஏற்பட்டதாக புனையப்பட்ட காதல் கதை மிகவும் சுவையான பகுதி, அதில் ஏற்படும் பிரிவும். சந்தனமல்லியின் வாழ்வில் ஏற்பட்ட மகிழ்ச்சியும், சோகமும் அழகாக புனையப்பட்டுள்ளது. மக்கள் நலனிலும், குடும்பத்தாரோடு உள்ள பாசப் பிணைப்பிலும் பேரரசரின் மனப்பாங்கை எடுத்தியம்பிய விதம் சிறப்பு. இராசேந்திரனின் வீரமும், வெற்றிகளும் தலைமைச் சிறப்பும்... புதினத்தின் முக்கிய கதாபாத்திரமான அருண்மொழி சந்திரமல்லியின் திறமைகளும், பருவத்தில் ஏற்பட்ட தடுமாற்றமும், அதனால் விளைந்த விளைவுகளும்... சூழ்ச்சியால் நடந்த பிரிவுகளும், பின்னர் வந்த தெளிவும், மனமாற்றமும் அருமையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல், இராசராசரின் ஆன்மிக வாழ்வியலில் மனம் மோனநிலைக்கே செல்கிறது. அமானுஷ்யமும், ஆன்மிகமுமாக பல சம்பவங்கள் ஆச்சரியமூட்டும் விதமாக உள்ளது. இராராசர் மற்றும் இராசேந்திரனின் ஆன்மிகத் தொண்டின் சாட்சிகளாய் இன்றும் நாம் காண தஞ்சையிலும், கங்கை கொண்ட சோழபுரத்திலும் நிமிர்ந்து நிற்கின்றன. இன்னும் பயணப்பட படித்து மகிழ்வுறுங்கள்.... ஓங்குக தமிழ்... தொடரட்டும் சகோதரியின் தமிழ்ப்பணி...
