அருமொழி அன்பின் திருவுருவே
திருமகள் போலப் பெருநிலம் செல்வியும் என்று கல்வெட்டில் துவக்கி வைத்த ராஜகேசரி இராஜராஜா
காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளிய கந்தர்வனே
குஞ்சரமல்லி கொண்டாடிய கோமகனே
பஞ்சவன் மாதேவியின்
பாகம் பிரியோனே
திருமுறைகளை காத்த
திருமுறைச் சோழா
சிங்கநிகர் ராஜேந்திரனை மகவாய் பெற்ற பராந்தகன் மைந்தா
பார்போற்றும் பெரிய கோவிலை தமிழர்களின் சிறப்பாய் தந்த பொன்னியின் செல்வனே

ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஓடியும் நிலைத்த புகழோடு நிற்கும் சிவபாதசேகரா
சைவத்தைப் போற்றி ஈசனோடு இரண்டர கலந்து தான் நீ மறைந்தனையோ
மன்னவர்க்கு மன்னனே
மாசில்லாத ஐப்பசி சதயமே
வல்லவரையர் வந்தியத்தேவர் ஸ்ரீ பராந்தகன் குந்தவைப் பிராட்டியின் சோதரா
சோழ குலவிளக்கே நீ ஆயிரமாயிரம் ஆண்டுகள் வாழிய வாழியவே.