இரண்டு வருடங்களுக்கு முன்பு படைப்பு குழுமத்தின் மின்னிதழில் எனது படைப்பான ரோபோ காத்தப்பன் என்ற சிறுகதையை வெளியிட்டார்கள். இதில் என்ன மகிழ்ச்சியான விஷயம் என்றால் அந்த கதையின் கருத்து மனித கழிவுகளை மனிதனே அகற்றும் கொடுமையான நிகழ்வை நிறுத்த அந்த கொடுமையான பணிகளைக் காலங்காலமாக செய்து வரும் ஒரு குடும்பத்தில் பிறந்து படித்து விஞ்ஞானியாக ஆனதும் அவளுடைய முதல் கண்டு பிடிப்பு மனித கழிவுகளை அகற்ற ஒரு ரோபோ . அதன் பெயர் காத்தப்பன். தன் கண்டு பிடிப்பின் உரிமையை இலவசமாகவும் அதை உலக நாடுகள் பயன்படுத்தி தன்னைப் போல் குடும்ப உறவுகளை இழக்காமல் அந்த மக்களின் இறப்பை தடுக்க வேண்டும் என்றும் வேண்டுகிறாள். இன்று இந்தக் கதையின் மையக் கருத்தான மனித கழிவுகளை மனிதனே அகற்ற ரோபோவை இந்தியாவில் முதன் முதலாக கேரள மாநிலம் செயல் படுத்தியுள்ளது. கேரள முதல்வருக்கு என் கோடி கோடி நன்றியும் வாழ்த்துகளும்.
