காதல் மயக்கம்

நிற்கிறேன் நடக்கிறேன்
காண்கிறேன் புரியலையே 🍃
ஒன்றும் புரியலையே குழப்புதே தவிக்குதே இதுதான் காதலா!!! புரியலையே🍃

உன்னைக் காண்கையிலே நன்றாக இருக்குதே☘️
புரியாமல் பாடுகிறேன்
ரோஜாப்பூ 🌹கூட ஒன்று வாங்க ஆசைதான்
எல்லாமே புதுசு இந்த தவிப்பு புதுசு உனக்காக என் இதயம் ❤️ஏனோ துடிக்குது💕
உலகமே அழகான நந்தவனமாச்சு🌼🌺🌷🏵️💮🌸🥀🌹🌻
உனக்கு புரியுதா என் தவிப்பு
தெரிந்தால் எனக்காக அரை நொடி கண்ணே காத்திருப்பாயா?👀

என்றென்றும் காதலாக
என்றென்றும் நான் புன்னகைக்க
பேரழகான ஒளிபொருந்திய உன் புன்னகையால் எனை நிரப்பு👄
உன்னை என்றென்றும் காதலால் நிரப்ப என் கைகளைப் பற்றிக்கொள்💞
எனக்காக என்னுள் இருக்கும் உனக்காக
நானே இன்னும் முழுமையாக உணராத என் காதலுக்காக
காத்திருப்பாயா?🧚
காதல் குழப்பத்தில் மயக்கத்தில் இருக்கும் என்னைக் காப்பாற்றுவாயா?🤸

கோமகள் குமுதா

காதல் வானவில்

மழைநாளில் என்றாவது மாயமாய் தோன்றும் என் வானவில்லே!!
யாரேனும் உனைக்கண்டதுண்டோ என் வானவில்லே!!❤

உனை மறைக்கவில்லை நான் மறக்கவுமில்லை
எங்கே இருக்கிறாய் என் வானவில்லே?💕.

என் விருப்பம் வேண்டுதல் வரம் யாவும் நீ
என் இருண்ட வான்வெளியில் தோன்றிய அற்புத ஒளியுமிழ் விண்மீன் நீ
என் நினைவுகளின் ஏடுகளைப் புரட்டி உன் உருவம் தேடினேன்.💕

என் விழிகள் விரிய அண்டவெளி முழுதும் உனை மட்டுமே காணவேண்டும்.👀
என் இதயவீணை மீண்டும் மீண்டும் உன் நினைவையே மீட்டுகிறது. ♥

ஏன் எனது நாள் மட்டும் இவ்வளவு சிறிதாகப் போனது
என் இதயத்தை நீ எடுத்துப் போனாயோ!♥

எல்லா இரவும் பகலும் நீ என்னோடு கழித்த பொழுதுகளை நினைவூட்டுதே
என் நித்திரையிலும் உன் பெயர் என் சுவாசம் ஆனதே.♥

கோமகள் குமுதா

தூது போ இதயமே

குறிஞ்சித் தூது❤️

ஔவை பாடிய அகவன் மகளே அடி எனதருமை கட்டுவிச்சி ( குறி சொல்பவள் ) நீ பாடிய பாட்டை மீண்டும் மீண்டும் பாடடி உன் பாட்டில் அவர் இருக்கும் நன்னெடுங் குன்றம் பெயரையாவது என் செவிகள் கேட்கட்டும். கன்னி என் மனசு படும்பாட்டை தலைவனிடம் தூது போய் பாடடி என் அன்புக் கட்டுவிச்சி.

முல்லைத் தூது ❤️

புதுப்பூங்கொன்றைப்பூத்தது. புதுமாரிக் காலம் வந்தது என்று ஊரார் உரைத்தாலும் யான் தேறேன்.
சரக்கொன்றை பூக்கும் முன் சாரல் மழை பெய்யும்முன் வருவேன் என்றார். அவர் பொய் வழங்கலரே என் தோழி. என் துயரை தூது சென்று உரைத்திடுவாய் உயிரான என் தோழி.

மருதத் தூது❤️

கண்ணீரில் கரைவதையும் நித்திரை மறந்த என் கண்களையும் யார் அறிவார்.
கார்கால நள்ளிரவில் ஈயின் இம்சை தாளாமல் எருது தலையசைக்க கழுத்துமணியின் சப்தம் கேட்கும் ஊர் உறங்கும் நடுசாம வேளையிலே ஒத்தையிலே நித்திரையில்லாமே தவிக்கிற என் தவிப்பை ஏரில் பூட்டிய எருதே நீ தூது போய் சொல்வாயோ

நெய்தல் தூது❤️

ஓடைநீரில் ஆரல் மீனைத்தேடும் வெண் கொக்கே
என்னோடு அவன் கூடிப்பிரிந்து சென்றதை நீ அறிவாயே
மன்னவனைப் பிரிந்ததால் மாந்தளிர்மேனி நிறம்மாறி பீர்க்கம்பூ நிறமாச்சுதே. பசலை நோய் பற்றியதே.பறந்து சென்று அவனிடும் தூது சொல்லு என்னருமை வெண்கொக்கே.

பாலைத் தூது ❤️

கள்ளிக்காட்டுப் பாலையிலே நீ நடந்து போகையிலே செங்கால் பல்லி தன் சோடியத் தேடி தான் எழுப்பும் ஓசையிலே என் மன ஓசையை நீ கேட்கலையோ என் ஆசை மன்னவனே.செங்கால் பல்லியும் தான் தூது சொல்லலையோ மன்னவனே.

கோமகள் குமுதா

செம்மொழியே செந்தமிழே

Photo by Kristina Paukshtite on Pexels.com

தொல்தமிழ் வாழ்ந்த லெமூரியா கண்டம் மூழ்கியதே

மீண்டும் சங்கப்பலகை புதிதாக கீழடியில் வைகை நதியில் தோன்றியதே

சங்கத்தமிழ் மூன்றும் தா என்று ஔவை கேட்ட இரண்டு சங்ககாலமழிந்து நான்மாடக்கூடலிலே முத்தமிழ் வளர்த்த மதுரையிலே கடைச்சங்கம் பிறந்ததுவே

உலகம் போற்றும் என் தமிழை நான் பிறந்த மண்ணில் வளர்க்க வழியில்லையே.

உயிர்குயிராம் எம் செம்மொழி வாழ வண்ணத்தமிழ் வளர்க்க
வானோரும் வியந்து நோக்க வேண்டுகிறேன் தமிழ்த்தாயே உன்னை.

இக்கணமே படைத்திடு இனிய தமிழ் காக்க புத்தம்புது பூமி ஒன்று.

செம்மொழியே என் தாய்மொழியே நீ வாழிய வாழியவே.

கோமகள் குமுதா