அன்புள்ள மன்னவனேஆசையில் ஓர் கடிதம்

உயிரே, உனக்கு
கடிதம் எழுத ஆசை தான்

எப்படி என்ன எழுதுவது
என்று புரியாமல் தவிக்கிறேன்

கவிதையாக கதைக்கத்தான் ஆசை

ஆனால் கவிதையின் கருவாய் அருகில் நீ உரசிக்கொண்டே
இருந்தால் எப்படி
தள்ளிப் போ

உன்னில் நானும்
என்னில் நீயும் எழுதிய கவிதைகளை நான் எப்படிச் சொல்வேன்

உனக்கு மடல் வரைவதில்
எனக்கு தோன்றும்
குழப்பமும் தயக்கமும்
உனக்கு இப்போது
புரிகிறதா என் அன்பே

கோமகள் குமுதா

Leave a comment