கடவுள்

கடவுள் இருக்கிறார் என்று சொல்ல உங்களுக்கு எவ்வளவு உரிமை உள்ளதோ அதே உரிமை கடவுள் இல்லை என்று சொல்பவர்களுக்கும் உண்டு. இதில் கடவுள் இல்லை என்று சொல்பவர்களைப் பார்த்தால் சிரிப்பு வருகிறது என்று உளறுவது அபத்தம் இல்லையா?

எல்லையில்லாத மனமகிழ்ச்சி.

இரண்டு வருடங்களுக்கு முன்பு படைப்பு குழுமத்தின் மின்னிதழில் எனது படைப்பான ரோபோ காத்தப்பன் என்ற சிறுகதையை வெளியிட்டார்கள். இதில் என்ன மகிழ்ச்சியான விஷயம் என்றால் அந்த கதையின் கருத்து மனித கழிவுகளை மனிதனே அகற்றும் கொடுமையான நிகழ்வை நிறுத்த அந்த கொடுமையான பணிகளைக் காலங்காலமாக செய்து வரும் ஒரு குடும்பத்தில் பிறந்து படித்து விஞ்ஞானியாக ஆனதும் அவளுடைய முதல் கண்டு பிடிப்பு மனித கழிவுகளை அகற்ற ஒரு ரோபோ . அதன் பெயர் காத்தப்பன். தன் கண்டுContinue reading “எல்லையில்லாத மனமகிழ்ச்சி.”

நன்றி நன்றி நன்றி.

வட அமெரிக்க தமிழ் சங்கப் பேரவை விழா மலரில் ” பண்டைய தமிழர்களின் அளவியல் முறைகள்” என்ற எனது படைப்பை வெளியிட்ட மைக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. மேலும் இது போன்ற படைப்புகளை எழுதி வட அமெரிக்க தமிழ் சங்கப் பேரவை விழா மலருக்கு அனுப்பி வைக்க விவரங்களை கொடுத்து எனக்கு பேருதவி புரிந்த சகோதரர் எழுத்தாளர் ஆரூர் பாஸ்கர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி கோடி கோடி.

காதல் சரிதம் பச்சரிசி பல்லழகிஎன்றாய் தஞ்சைத்தரணி ஆண்ட சோழனா நீ?வீரமாய் நான் தழுவும் புருவ வில்லழகி என்றாய்மலைநாட்டரசன் சேரனா நீ ?முத்துசிப்பி கவிழ்த்து வைத்த கண்ணழகி என்றாய் மதுரையாண்ட பாண்டியனா நீ?தேனூறும் கொவ்வைச் செவ்வாயழகி என்றாய் கொங்கு வேந்தனா நீ ?தங்கச்சிலையே என் மதி மயங்குதடி சிற்பமே என்கிறாய்பல்லவனா நீகவிதை சொல்லி காதல் கதைகள் பேசும்கவிஞனா ?யாரடா நீ ?உனக்காகவே கைகளில்பைந்தமிழ் மாலையுடன் காத்திருக்கிறேன்மண்ணின் மகள் …..கோமகள் குமுதா