ரௌத்திரம் பழகு பாப்பா

வாளெடுத்து விளையாடு பாப்பா வஞ்கர்களை விட்டுவைக்கலாகாது பாப்பா

ஆயிரம் முறை கத்திக்கேட்டாலும் நீதி கிடைக்காது பாப்பா உன் கத்தியை வீசி விளையாடு பாப்பா

கயவர்களை கண்டால் காரி உமிழாதே பாப்பா

கண்டந்துண்டமாக வெட்டிப் போடடி பாப்பா

பயங்கொள்ள வேண்டும் பாப்பா

உனை ஒரு தரம் தொட்டாலும் உயிர்
போய்விடும் என்று

பாதகன் பயம் கொள்ளவேண்டும் பாப்பா.

கோமகள் குமுதா

Leave a comment