ஆங்கிலப் படங்களை ஒலி அதிகமாக இருந்தால் தான் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது என்று ரசிக்கிறோம். 3D, graphics இன்னும் சிறந்த கேமிராக்களையும் கருவிகளையும் பயன்படுத்தி எடுத்த ஜூராசிக் பார்க், ஹாலோ மேன்,transformers, pirates of the Caribbean sea போன்ற திரைப்படங்களில் பயன்படுத்தி உள்ள தொழில் நுட்பத்தை கண்டு ரசிக்கிறோம்.
நம் தமிழ் மற்றும் இந்திய திரைப்படங்களில் உயர்ந்த தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்தியன், விஸ்வரூபம் கோச்சடையான் 3D view வில் சமீபத்தில் வெளியான கங்குவா போன்ற திரைப்படங்களை நாம் ஏன் அவ்வளவாக ரசிக்கவில்லை காரணம் தெரியுமா? இந்தப் படங்களைத் தயாரிக்க ஒரு சினிமா தயாரிப்பாளருக்கு அதிக பணம் எதில் செலவாகிறது தெரியுமா? அந்த படங்களில் நடிக்கும் கதாநாயகர்களுக்கு சம்பளமாக குறைந்தது 150 கோடிகளில் இருந்து அதிகபட்சம் 200 கோடிகள் தயாரிப்பாளர் தரவேண்டும். ஆங்கிலப் படங்களோடு ஓரளவிற்கு ஒப்பிட சிறந்த தொழில் நுட்பம் வேண்டும் என்றால் அதற்கு குறைந்தது 200 to 300 கோடிகள் செலவிட வேண்டும் . சிறந்த தொழில்நுட்பத்திற்கு செலவு செய்ய பணம் இல்லாமல் சுமாராக நமது தெய்வங்களை படங்களில் காண்பிப்பது போல் புளூ சிவப்பு கலரில் அம்மன் கையிலிருந்து மின்னல் இடி போன்று வருவதைப் போல் தான் காட்சிப் படுத்த முடியும்.அதையும் தாண்டி கடன் வாங்கி படம் தயாரித்து முடித்து விடுவார்கள். இப்படி 400 to 500 கோடிகள் செலவு செய்து தயாரித்த திரைப்படம் வெளியிடும் போது அரசியல் காரணங்கள் கதாநாயகர்கள் மேல் உள்ள தனிப்பட்ட வன்மங்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு கடன் கொடுத்தவர் அந்த திரைப்படத்தை வெளியிட நீதிமன்றத் தடை இன்னும் இது போல் நீங்கள் எண்ணியே பார்க்க முடியாத காரணங்களை கடந்து படம் வெளிவருகிறது. நம்மைப் போன்ற சாதாரண மக்கள், மக்கள் என்ற பெயரில் ஒளிந்துள்ள வன்ம குடோன்கள், அரசியல்வாதிகள் இந்த திரைப்படங்களை முதல் காட்சியை பார்த்தவுடன் ஆதிவாசிகள் போல் கத்துகிறார்கள், மொழி என்ன பேசுகிறார்கள் என்றே தெரியவில்லை எதுவும் நன்றாக இல்லை என்றும் தியேட்டரில் கூட்டமே இல்லை முதல் நாள் வசூல் 10 கோடி கூட இல்லை என்று நமக்குத் தெரிந்த தெரியாத அத்துனை விஷயங்களையும் இந்த சமூக பொதுவெளியில் பேசி விமர்சிப்போம். நீங்கள் ஒரு திரைப்படம் பார்க்கச் சென்றால் ரசிகனாக உங்கள் கருத்துக்களை சொல்ல பேச உரிமை உள்ளது. அந்தப் படம் இவ்வளவு தான் வசூலாகி இருக்கிறது என்று தினம் தினம் போலியான விவரங்களை பரப்பி நகைக்கவும் கேலி பேசவும் உங்களுக்கு யார் அந்த உரிமையை கொடுத்தது. அதன் தயாரிப்பாளர் செலவு செய்தவர் உங்களிடம் வந்து என் பணவரவு இவ்வளவு தான் என்று கூறினாரா? நாம் இப்படியே செய்து கொண்டிருந்தால் கேவலமான ஸ்மக்ளர்ஸ் திருடர்கள் ரவுடிகள் கஞ்சா விற்பவர்கள் போன்ற கதையமைப்பில் வெளிவந்து 1000 கோடி வசூல் என்று போலியாக பீற்றிக் கொள்ளும் புஷ்பா போன்ற படங்களைத் தவிர வேறு எந்தப் படங்களும் வெளிவராது. மக்களாகிய நம் ரசனையில் சிந்தனையில் மாற்றம் வந்தாலோழிய இந்திய சினிமாவின் எதிர்காலம் இருண்ட காலம் தான்.