காதல் கொண்டேன்♥️ காதல் கொண்டேன்♥️

என்ற எனது புதிய நாவல் அமெசான் கிண்டிலில் இன்று வெளியிடப்பட்டது. அமெசான் கிண்டில் வாடிக்கையாளர்கள் இலவசமாக தரவிறக்கம் செய்து வாசிக்கலாம். என்னுடைய http://www.komagalkumudha.com வலைதளத்தில் இந்த நாவலின் ஒலிப்புத்தகம் ஒவ்வொரு அத்தியாயமாக வரும் திங்கட்கிழமையிலிருந்து தினமும் பதிவிட எண்ணி இருக்கிறேன். கேட்டு எப்படி இருக்கிறது என்று உங்கள் மேலான கருத்துக்களைக் கூறும்படி அன்புடன் வேண்டுகிறேன் நட்பூக்களே.🙏🙏🙏

குறிஞ்சிப்பூ

முகநூல் நட்பு கணேஷ் பாலா நடத்திய படத்திற்கு கதை எழுதுவாங்க என்ற சிறுகதைப் போட்டியில் 64 பேர் எழுதியதில் 20 பேர் தேர்வான முதல் சுற்றில் தேர்வான என் சிறுகதை. நன்றிங்க கணேஷ் பாலா சகோதரர் 🙏🙏 கதை எழுத வாங்க — 6 தலைப்பு — குறிஞ்சிப்பூ வாராமல் வந்த மாமணி என்று திருமணமாகி பத்து வருடங்கள் கழித்துப் தங்களுக்கு பிறந்த மகளைக் கொண்டாடி மகிழ்ந்தனர் கிருஷ்ணனும் வாசுகியும். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தாள்Continue reading “குறிஞ்சிப்பூ”

ஷகுரா — அத்தியாயம்-5

அழகான ,சுறுசுறுப்பான, கெட்டிக்கார  இளைஞன் ஷிஃபாங்.  அவன் சியோலில் இருந்து ஹோட்டல் மேனேஜ்மென்ட் உயர் கல்வி கற்க வங்கி கடன் பெற்று கனடா வந்து நியூ வெஸ்ட் மினிஸ்டிலுள்ள டக்ளஸ் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். இரண்டாம் ஆண்டு  கடைசி செமஸ்டர் முடிய இன்னும் இரண்டு மாதங்கள் இருந்தன. கடந்த ஒன்றரை ஆண்டாக அவன் மேற்படிப்பு படித்துக் கொண்டே   தமிழ்நாட்டுக்காரர் ஒருவர் நடத்தி வந்த  ஒரு சிறிய சாப்பாட்டுக் கடையில் பகுதி நேர வேலை பார்த்து வந்தான். சிறிய Continue reading “ஷகுரா — அத்தியாயம்-5”

அழகான ஆண் தேவதைகள்

அழகான என் ஆண் தேவதைகள்.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ பிறந்ததும் ஆண் பிள்ளை அல்ல என்று மூன்று நாள் என் முகம் பாராது அதன்பின் என்னைச் செல்லமாய் ” ராஜா” என்று தன் மூச்சு நிற்கும் வரை கொஞ்சியும் அடித்தும் ஆளாக்கிய  அப்பா நான் கண்ட முதல் பேரழகான ஆண் தேவதை.❤️ மகன் பிறந்த போது அடைந்த இன்பத்தை விட நான் பிறந்த போது இருமடங்காக பேரின்பம் கொண்ட என் தாய் வழி தாத்தாவும் தந்தைவழி பாட்டனும் அழகான ஆண் தேவதைகள்.❤️❤️Continue reading “அழகான ஆண் தேவதைகள்”

ஷகுரா அத்தியாயம்–4

ஷகுரா வாரத்தில் ஐந்து நாட்களும் உணவகத்தில் எல்லா பிரிவிகளிலும் அடிப்படை வேலையிலிருந்து சமைப்பது ஒன்றைத் தவிர மேற்பார்வை, நிர்வாகம் அன்றன்று தயாரிக்கப்படும் உணவு வகைகள் அதற்கு வேண்டிய பொருட்களை உள்ளூர் விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாங்குவது மது பானங்கள் குறையக் குறைய கையிருப்பில்  வாங்கி வைப்பது பதார்த்தங்களின் சுவையும் தரமும் பரிசோதிப்பது, உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களை வரவேற்று முன்பதிவு செய்திருந்தால் அந்த மேசையில் அமர்த்துவது, முன் பதிவு செய்யாமல் வருபவர்களுக்கும் இடமிருந்தால் உடனடியாக அமரவைப்பது, அல்லது சிறிது நேரம்Continue reading “ஷகுரா அத்தியாயம்–4”