புத்தன் ஏசு காந்தி பிறந்த என் தாய்மண்ணே உன்னைப்போற்றி வணங்குகிறேன் .🙏🙏🙏
Category Archives: கவிதைகள்
எனக்கு பிடித்த வீரமங்கை
அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்.🙏🙏🙏🙏 சிவகங்கை அரண்மனையின் ஆலோசனை கூடத்தில், கால் மேல் கால் போட்டு, கம்பீரமாய், கர்வமும், ஆணவமும் நிரம்பி வழியும், முகத்துடன் அமர்ந்திருக்கின்றான் கவர்னர் லாட்டீ காட்.சிறிது நேரத்தில் சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர் உள்ளே நுழைகிறார். நாற்காலியில் மேலும் பின்னோக்கி சாய்ந்து, இடது காலின் மேல், இருக்கும் வலது காலினை ஆட்டியபடியே, அதிகாரத் தோரணையில் பேசுகிறான் கவர்னர் லாட் டீ. மிஸ்டர் முத்து வடுகநாதர், நீர் எமக்குக் கொடுக்க வேண்டிய வரியை, வெகுContinue reading “எனக்கு பிடித்த வீரமங்கை”
எதிரெதிர் துருவங்கள்
உலகையே நடுநடுங்க வைத்தான் ஒருவன் உலகையே சிரிசிரிக்கவைத்தான் மற்றொருவன் ஏழ்மையினால் வாடிசமூகத்தை தன் காலடியில் நசுக்கி சர்வாதிகாரி ஆனான் ஒருவன் ஏழ்மையில் வாழ்ந்தாலும் இல்லாதவர்க்கு இயன்றவரை உதவிசெய்து இதயங்களை திருடினான் மற்றொருவன் இரக்கமற்ற அரக்கனையும் இதயமுருகி காதலித்தாள் ஈவா இன்முகம் காட்டி துன்பமெல்லாம் மறைத்து மக்களை சிரிக்கவைத்த நல்லவனை காதலிக்க யாருமில்லே அதுபோல கத்தி எடுத்தவன் கத்தியாலே இறந்தான்துப்பாக்கியாலே சுட்டுக் தற்கொலை பண்ணிகிட்டான் பாவி ஹிட்லருந்தான் கடகடன்னு ஆடிப்பாடிகோமாளி ஆனாலும் மக்களின் மனங்களில்மறையாமல் வாழ்கிறான் கோமகனாக என்Continue reading “எதிரெதிர் துருவங்கள்”
நீயும் நானும்
கமழும் நறுமணம் நீ உன் வண்ணமலர் நான் உயிரோவியம் நீ உன்உடலோவியம் நான் இதய வானம் நீ உன்வெண்ணிலவு நான் மேனி தழுவும் தென்றல் நீ உன் மேரு பர்வதம் நான் மனம் நனைத்த மழை நீ உன் மண்மகள் நான் மானம் காக்கும் தமிழ்ச்சிப்பி நீ உன் முத்தழகி நான் ஏர் சுமக்கும் உழவன் நீ உன் பொன்னேர் நான் வாழ்வாதாரம் நீ உன் வாழ்வின் வளங்கள் நான். கோமகள் குமுதா
பனைமரமே🌴🌴🌴🌴 பனைமரமே🌴🌴🌴🌴
பனைமரமே🌴 பனைமரமே🌴பல்லாண்டு வாழும் என் பனையேபாரினில் நெடுங்காலம் நீ வாழ பாசமுள்ள என் சகோதரன் சட்டம்போட்டு உனைக் காத்தனே.பார் போற்றும் என் தலைமகனைபாடி நானும் வாழ்த்துகிறேன்பல்லாண்டு பல்லாண்டு வாழ்க நீ🙏 பழந்தமிழையும் தமிழரையும் பண்புடனே ஆளும் எம்பெருமானேபார் போற்ற நீவீர் வாழிய வாழியவே🙏 கோமகள் குமுதா