ரௌத்திரம் பழகு பாப்பா

வாளெடுத்து விளையாடு பாப்பா வஞ்கர்களை விட்டுவைக்கலாகாது பாப்பா ஆயிரம் முறை கத்திக்கேட்டாலும் நீதி கிடைக்காது பாப்பா உன் கத்தியை வீசி விளையாடு பாப்பா கயவர்களை கண்டால் காரி உமிழாதே பாப்பா கண்டந்துண்டமாக வெட்டிப் போடடி பாப்பா பயங்கொள்ள வேண்டும் பாப்பா உனை ஒரு தரம் தொட்டாலும் உயிர்போய்விடும் என்று பாதகன் பயம் கொள்ளவேண்டும் பாப்பா. கோமகள் குமுதா

முற்றத்து துளசி

சாமத்திலே யாருக்காக முற்றத்திலே ஏங்கி நிக்கிற துளசிச்செடியே ஆறாம மனவலி தீராமஆடாம அசையாம ஏன் நிக்கிற முற்றத்து துளசிச்செடியே விடிஞ்சா முடிவாயிடும்வீணாப்போன பட்டணத்தாசையாலே முற்றத்தை இடிச்சு அடுக்குமாடி கட்டப்போறான் தண்ணீரில் மீனழுவது போல நீ அழுதாலும் தொழுதாலும்தள்ளியா வைக்கப் போறான் துளசிச்செடியே கடைசியா அழுதிடுஎன் ஆசை முற்றத்து துளசிச்செடியே கோமகள் குமுதா

பச்சைக்கிளியிடம் யாசிக்கும் தாய்க்கிளி

உன் சிங்கார மழலை கேட்க அந்தச் சிவனே வருவான் என் கண்ணே கண்மணியேம்மா….ம்மா…என்று செல்லமாய் நீ அழைத்தால் உள்ளம் நிறையுமே என் கட்டிக் கரும்பே கனியமுதேஉன் செம்பவழ வாய் திறந்து என் செவி குளிர கூவடி என் குலக்குயிலே.அழகு மயிலுக்கு அகவை ஐந்தாகியும்வெங்கல மணியாய்கிண்கிணியாய் இசைக்கவில்லையே என் ஊமைக்குயில்அம்மா என்றழைக்க என் செல்லக்கிளிக்கு நீயும் கற்றுத்தர மாட்டாயா பசுங்கிளியே.பாலும் பழமும் நான் தருவேன் பச்சைகிளி உனக்குநான் பெற்ற பைங்கிளிக்கு ஒரு சொல் அந்த ஒரு சொல் சொல்லிக்Continue reading “பச்சைக்கிளியிடம் யாசிக்கும் தாய்க்கிளி”

பிறந்த வீடே போய்வரவா

தோள்மேல மார்மேல தூக்கி வளர்த்த உசுரான அப்பாவே போய் வரவா அடுக்கு மல்லிப்பூ தச்சுதாழம்பு சேர்த்து வச்சுபின்னல் சடை போட்டுஅழகு பார்க்கும் அம்மாவே போய் வரவா அடிச்சாலும் புடிச்சாலும் நானழுத கூட அழும் அண்ணே நான் போய் வரவா குறுந்தாடி வச்சிருக்ககுட்டித் தம்பி உன்னைவிட்டுஆட்டுத்தாடி வச்சிருக்கஆசைமாமானோட போய் வரவா வயித்துவலியாலே மாசாமாசம் அழுதபோதெல்லாம் மடியிலே சாச்சுகிட்டுஅடிவயித்திலே விளக்கெண்ணை விடிய விடிய தேச்சு என்னைத் தடவித்தடவிதூங்க வச்ச என் ஆசை அப்பத்தாவே உன்னையும் விட்டு நான் போய் வரவாContinue reading “பிறந்த வீடே போய்வரவா”

அன்றும் இன்றும்

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை அன்றுகூடினாலே வரும் கோடித் தீமை கொரோனா இன்று தீண்டாமை பெரும்பாவம் அன்றுதீண்டினாலே பற்றும் பெரும் நோய் இன்று கொஞ்சிப் பேசினால் முத்தமிட்டால் காதல் வைரஸ் வரும் அன்றுகொஞ்சம் அருகில் நின்று பார்த்தால் வரும் கொரானோ வைரஸ் இன்று உலகம் ஒரே கிரகம் அன்றுநீ மட்டும் தனி கிரகம் இன்று தும்மினால் ஆயுசு நூறு என்பார் அன்றுதும்மினால் ஆயுசு போச்சு என்பார் இன்றுகட்டிப்பிடித்து கைகுலுக்குவது நாகரீகம் அன்றுதள்ளி நின்று கரங்கூப்பி வணங்குவது நாகரீகம்Continue reading “அன்றும் இன்றும்”