தமிழ் காதல்

க…ச…ட…த…ப…ற… வல்லினம்
மங்கை நானோ மெல்லினம்

ஞ ..ங..ந …ன ..ம ..ண ..
என்று உன்னையே அசை போட்டது என் மனம்.

உன்னை கண்ட இந்தப் பூவினம்
உன் விரல் தொட ஏங்கும் என் இடையினம் கூட
ய…ர…ல…வ..ழ…ள.
என்றே துவண்டதடா.

உயிர் எழுத்தாக வந்து இந்த மெய்யெழுத்தை தீண்ட வா வா…

உயிர்மெய்யாக உருமாறி தமிழ்த் தேரேறி உலகையே வலம் வருவோம்
அஃதே என் அவா

வா ..வா…என் அன்பே………
இது காதல் தமிழ்க்காதல்…..

கோமகள் குமுதா

2 thoughts on “தமிழ் காதல்

Leave a reply to மதுரைத்தமிழன் (அவர்கள்...உண்மைகள் ) https://avargal-unmaigal.blogspot.com Cancel reply