கிரேக்கக் கடவுள் பொசைடனுக்கும் மனித பெண்ணிற்கும் பிறந்த கடவுள் பாதி மனிதன் பாதியான (Demi GOD) பெர்ஷியஸ் பிறந்த வட புலத்திலிருந்து (northern hemisphere) விண்வெளியில் 11 ஆம் தேதியிலிருந்து 13 ஆம் தேதி வரை நள்ளிரவில் ஆரம்பித்து அதிகாலை வரை விண்கற்கள் மழை ( metroid shower) என்ற அரிய நிகழ்வு நடக்கவிருக்கிறது. பெர்ஷியஸ் பிறந்த வட புலத்திலிருந்து இந்த விண்கற்கள் மழை தொடங்குவதால் இதன் பெயர் பெர்ஷியட் விண்கற்கள் மழை ( Perseid meteor shower) என்பதாகும். இந்த விண்கற்கள் சூரியனை ஒரு முறை சுற்றி வர 133 வருடங்கள் ஆகிறது. இந்த விண்கற்கள் மழை வருடம் ஒரு முறை தெரிந்தாலும் பூமி இந்த விண்கற்களின் சுழற்சிக்கு மிக அருகில் கடக்கும் ஆகஸ்ட் மாதத்தில் தான் மிகத் தெளிவாகத் தெரிகிறது. இந்த விண்கற்கள் மழை வாணவேடிக்கையை உலகின் எல்லா இடங்களிலும் பார்க்கலாம். வடபுலத்தில் (northern hemisphere) இருப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும். வாங்க விண்கற்கள் மழையை வாண வேடிக்கை பார்க்கலாம் நட்பூக்களே.
