கொங்குத் தேன் அருந்தும் குறிஞ்சி நிலத்து அழகிய வண்டே நீ அறிந்த மலர்களுள் என்னவள் கூந்தல் போல நறுமணமுள்ள மலர்களை நீ நுகர்ந்ததுண்டா?
அசைகின்ற மூங்கில் தோளழகு
அலைபாயும் அகண்ட சேல் அழகு. வெகு தூரத்தில் அங்கே நீ
பசுமையான அகன்ற வயலிருந்தும் ஓர் ஏருள்ள உழவன் போல அவசரத்தில் தவிக்கிறேனடி இங்கே நான்.
மருதநிலத்து மாது ஒருத்தி உன் அடிமை நான் என்றே புறம்பேசிப் பழிக்கிறாள் என்னை. ஏழேழு ஜென்மத்திலும் நீயே என் ஆவிக்கிளியென்று அவள் எப்படி அறிவாள் .
உங்க ஊரு சிறுகோட்டுப் பலா கூட கிளைகளை வருத்தும் கிராதகப் பழமடி .அதைக் கண்டே உன் உயிர் வலி தெரிந்ததடி என் மலைநாட்டு மாங்குயிலே.
இது காதல் .அழகான என் தமிழின் குறுந்தொகைக் காதல்.
கோமகள் குமுதா