நன்றி நன்றி நன்றி.

வட அமெரிக்க தமிழ் சங்கப் பேரவை விழா மலரில் ” பண்டைய தமிழர்களின் அளவியல் முறைகள்” என்ற எனது படைப்பை வெளியிட்ட மைக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. மேலும் இது போன்ற படைப்புகளை எழுதி வட அமெரிக்க தமிழ் சங்கப் பேரவை விழா மலருக்கு அனுப்பி வைக்க விவரங்களை கொடுத்து எனக்கு பேருதவி புரிந்த சகோதரர் எழுத்தாளர் ஆரூர் பாஸ்கர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி கோடி கோடி.

காதல் சரிதம் பச்சரிசி பல்லழகிஎன்றாய் தஞ்சைத்தரணி ஆண்ட சோழனா நீ?வீரமாய் நான் தழுவும் புருவ வில்லழகி என்றாய்மலைநாட்டரசன் சேரனா நீ ?முத்துசிப்பி கவிழ்த்து வைத்த கண்ணழகி என்றாய் மதுரையாண்ட பாண்டியனா நீ?தேனூறும் கொவ்வைச் செவ்வாயழகி என்றாய் கொங்கு வேந்தனா நீ ?தங்கச்சிலையே என் மதி மயங்குதடி சிற்பமே என்கிறாய்பல்லவனா நீகவிதை சொல்லி காதல் கதைகள் பேசும்கவிஞனா ?யாரடா நீ ?உனக்காகவே கைகளில்பைந்தமிழ் மாலையுடன் காத்திருக்கிறேன்மண்ணின் மகள் …..கோமகள் குமுதா

காதல் முட்க்கள்

நீ கொடுத்த ஒற்றை ரோஜா என் இதயத்தில் எப்பொழுதும் மணக்கிறது.நீ இல்லாத இந்தக் காலங்களில் கற்றை ரோஜாக்களை கண்டாலும் என் இதயத்தில் முப்பொழுதும் முள்ளாக குத்துகிறது.

காலங்களை வென்ற காவிய நாயகனே வாழிய வாழியவே

அருமொழி அன்பின் திருவுருவேதிருமகள் போலப் பெருநிலம் செல்வியும் என்று கல்வெட்டில் துவக்கி வைத்த ராஜகேசரி இராஜராஜா காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளிய கந்தர்வனே குஞ்சரமல்லி கொண்டாடிய கோமகனேபஞ்சவன் மாதேவியின்பாகம் பிரியோனே திருமுறைகளை காத்ததிருமுறைச் சோழா சிங்கநிகர் ராஜேந்திரனை மகவாய் பெற்ற பராந்தகன் மைந்தா பார்போற்றும் பெரிய கோவிலை தமிழர்களின் சிறப்பாய் தந்த பொன்னியின் செல்வனே ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஓடியும் நிலைத்த புகழோடு நிற்கும் சிவபாதசேகரா சைவத்தைப் போற்றி ஈசனோடு இரண்டர கலந்து தான் நீ மறைந்தனையோ மன்னவர்க்கு மன்னனேமாசில்லாதContinue reading “காலங்களை வென்ற காவிய நாயகனே வாழிய வாழியவே”