பதிவரின் ஐஸ் ஸ்கேட்டிங் சாகசம்.

பதிவர் பலமுறை சாலையில் பனிக்குவியலில் வழுக்கி கீழே விழுந்ததால் கீழே விழுந்தாலும் அடிபடாமல் விழுவது எப்படி என்பதைக் கற்றுக் கொள்ள வீட்டின் அருகிலிருக்கும் ஐஸ் ஸ்கேட்டிங் பயிற்சி கூடத்திற்கு சென்றார். காலில் ஸ்கேட்டிங் காலணிகள், பனித்தரையில் நடக்கும் போது குளிரடிக்காமல் இருக்க பிரத்யேக உடைகள், கையுறைகள், அணிந்து பனித்தளத்தில் பந்தாவாக களமிறங்கிய பதிவருடன் உடன் சறுக்கிய மற்ற பதிவர்களுக்கு வயது மூன்றிலிருந்து பத்து வரை. மான அவமானங்களைப் பாராமல் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனைப்Continue reading “பதிவரின் ஐஸ் ஸ்கேட்டிங் சாகசம்.”

முத்தம்

கண்களை வேல்கள் என்றாய்புருவங்கள் விற்களானதுபார்வை ஃபசூகா என்றாய்இடையில் ஒளிந்துள்ள ஆயுதங்கள் இந்திய ராணுவத்திலேயே இல்லை என்றாய்மொத்தத்தையும் இழந்து நான் நிராயுதபாணியானேன் உன் ஒற்றை முத்தத்தால்😘

பதிவரின் பயப் பொங்கல்

தினமும் குப்பை கொட்டப் போகும் பொழுது கீழ் தளத்தில் குடியிருக்கும் கனடா நாட்டுப் பெண்மணியான கிளாரா என்பவர் பேசிப் பழக்கமாகி பதிவருக்கு தோழியானார். கிளாராவுக்கு சேலை கட்டும் இந்தியப் பெண்களின் மேல் அளவு கடந்த காதல். பதிவரைக் காணும் பொழுதெல்லாம் கட்டிப் பிடித்து முத்தம் தருவார். பொங்கலுக்காக புதுச் சேலை அணிந்திருந்த பதிவரை வழக்கம் போல் குப்பை கொட்டச் செல்லும் போது தோழிக்கு சர்க்கரைப் பொங்கலை சிறிய கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு சென்ற பதிவரைக் கண்ட தோழிContinue reading “பதிவரின் பயப் பொங்கல்”

இரட்டையர்களின் பிறந்தநாள்.

இறைவன் எனக்கு இரட்டை வரமாக அருளினான். என் இரட்டைக் குழந்தைகளின் இனிய பிறந்தநாள் இன்று. வாழ்க செல்வங்களே பல்லாண்டு பல்லாண்டு.