முதன்முதலாக கனடா மண்ணில் கால் வைத்த போது “வெள்ளை மழை இங்கு பொழிகின்றது” என்று பரவசபட்ட பதிவர் நாட்கள் செல்லச் செல்ல 30 செ.மீ பனிகுவியலில் கால் வைத்து நடந்து பல முறை கீழே விழுந்து டிக்கி பிளாஸ்ட் ஆகி நொந்து நூடுல்ஸ் ஆன பின்னர் “எழுதுங்கள் இந்தப் பனியில் இது இரக்கமில்லாதது ” என்று புலம்ப ஆரம்பித்தார்.பதிவரின் பரிதாபங்கள்.🙄🙄
Author Archives: komagalkumudha
ஏஞ்சலினா vs சரோஜாதேவி
பதிவர் என்ன தான் ஏஞ்சலினா ஜோலி யாக தன்னை எண்ணிக் கொண்டாலும் பரம்பரையாக தான் சரோஜா தேவி குடும்பத்தை சார்ந்தவர் தான் என்று புரிந்து கொண்ட தருணத்தில்……..😒😒😒 பதிவரின் பரிதாபங்கள்.
அழகான App களின் பயன்பாடு
தக்குளியூன்டு பிங் கலர் base ரெண்டு சலக்கா போட்டு நெரவி, ரோஸ் க்ரீம் கொஞ்சமா கால் டப்பி மேலே தடவி, அரையே அரைக்கை குட்டிக்குரா பவுடர் பூசி, ரவூண்டு லிப்சிடிக் தடவி , ஸ்ரீதேவி கணக்கா இருக்கிற கண்ணழகை மறைச்சு கருப்புக் கண்ணாடி போட்டு ஒரு ஆசைக்கு புரோஃபைல் போட்டோ போட்டா அடுத்த நிமிட் என்ன போட்டோ ஆப்பு அக்கா என்று கேட்டு என் ஆசைக்கு ஆப்படித்த அன்புத் தம்பி Dhasaradanan நீ நூறாண்டு வாழ்க. ஏப்புContinue reading “அழகான App களின் பயன்பாடு”
பனிவிழும் மலர்வனம்
2021 ஆண்டின் கடைசி மாத இறுதியில் பதிவருக்கு அடுத்த வருடம் செய்ய வேண்டிய வேலைகள் அடைய வேண்டிய இலக்கு என்ன என்று கடந்த இருபது நாட்களாக சிந்தித்து ஒன்றும் தோன்றாமல் பக்கத்தில் உள்ள பூங்காவிற்கு செல்ல வழக்கம் போல் பனிக்கால உடைகளை ஒன்றொன்றாக அணிந்து மூட்டு வரை உள்ள பூட்டுகளை அணிந்து தெருவில் 15 செ.மீ. ஆழத்தில் கொட்டி கிடந்த பனிக்குவியலுக்குள் காலை இறக்கினார். மெல்ல கைகளை இருபுறமும் விரித்து சர்க்கஸ் செய்தபடி தெருவில் பனியில் சறுக்கிContinue reading “பனிவிழும் மலர்வனம்”
கோமகள் குமுதா வின் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
எல்லோரும் இன்பமாக மகிழ்ச்சியாக வாழ என் மகிழ்வான வாழ்த்துகள். இந்த ஆண்டு நான் மகிழ்ச்சியாக இருப்பதுடன் மற்றவர்களையும் மகிழ்விக்க முடிவு செய்திருக்கிறேன். சிரித்து வாழ வேண்டும். பிறரை சிரிக்க வைத்தும் வாழவேண்டும். 😊