இரட்டையர்களின் பிறந்தநாள்.

இறைவன் எனக்கு இரட்டை வரமாக அருளினான். என் இரட்டைக் குழந்தைகளின் இனிய பிறந்தநாள் இன்று. வாழ்க செல்வங்களே பல்லாண்டு பல்லாண்டு.

பொங்கல் திருநாள் வாழ்த்துகள்

அன்பு, மகிழ்ச்சி, சகோதரத்துவம், செல்வம், நலம் அனைத்தும் எல்லோர் இல்லங்களிலும் பொங்கிப் பெருகட்டும். அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

பதிவரின் வீர விளையாட்டு

வீட்டில் உள்ளவர்களோடு குஸ்தி, மல்யுத்தம், வாய்ச் சண்டையில் அலுத்துப் போன பதிவர் வெளியில் இருப்பவர்களோடு சண்டையிட எண்ணினார். ஏதாவது புதிய வீர விளையாட்டு கற்றுக் கொள்ள விரும்பினார். ” கயல்விழி இரு சற்று விளையாடி விட்டு வருகிறேன்” என்ற வசனத்தை தானும் எம்ஜிஆர் போல் பேச மட்டும் விரும்பாமல் அவரைப் போலவே வாள் சண்டை கற்றுக் கொள்ள விரும்பிய பதிவர் அந்தப் பயிற்சி கூடத்திற்கு சென்றார்.பதிவரின் வீர விளையாட்டு.🤺🤺🤺

கனடாவில் பள்ளிகள் திறப்பு

கனடாவில் கிறிஸ்துமஸ் புத்தாண்டு விடுமுறை முடிந்து பனிப்பொழிவு 20 செ.மீ இருந்ததால் விடுமுறை மேலும் ஒரு வாரம் நீட்டித்து இன்று பள்ளிகள் திறந்தாயிற்று. மீண்டும் பள்ளியில் பல கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். மாஸ்க் கட்டாயம். இதைத் தவிர ஒவ்வொரு குழந்தையின் இருக்கையைச் சுற்றிலும் கனமான நெகிழித் தடுப்பு. அதற்குள் தனியாகத்தான் அமர்ந்து படிக்க, சாப்பிட வேண்டும். அவரவர் வீட்டிலிருந்து குடிநீர் கொண்டு வர வேண்டும். ஒருவருக்கொருவர் தொட்டுக் கொள்வது அருகில் அமர்ந்து பேசுவதற்கு தடை, குழந்தைகள் தங்கள் பொருட்களைContinue reading “கனடாவில் பள்ளிகள் திறப்பு”

மனங்கொத்தி — சிறுகதை

“உங்க மனசோட வலி எனக்கு புரியுதுங்க. இந்த ஃபைல்லே நான் ரவிக்கு செய்த சிகிச்சை, கொடுத்த மருந்துகள், போட்ட ஊசிகள், அவனுக்கு சிகிச்சை செய்த மருத்துவர்கள் நர்ஸ்கள் வெளியிலிருந்து வந்து சிகிச்சையளித்த சிறப்பு மருத்துவர்கள், ரவி இறந்த அன்று பணியிலிருந்தவர்களைப் பற்றிய விவரங்கள் இப்படி சகல விவரங்களையும் நீங்கள் கேட்டபடி எழுதி இருக்கிறேன்.  உங்கள் மகன் இறப்பிற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். இது சம்பந்தமாக நீங்கள் தொடுத்திருக்கும் வழக்கிற்குத் தேவையான விவரங்களை அளித்து உங்களுக்கு   உதவக்Continue reading “மனங்கொத்தி — சிறுகதை”