இரண்டு நாட்களாக எதுவும் செய்யாமல் தன் நினைவுகளை அசை போட்டபடி வீட்டிலேயே படுத்து முடங்கி கிடந்தாள் ஷகுரா. அசை போட்ட நினைவுகள் மனத்திரையில் காட்சிகளாய் விரிந்து ஒவ்வொன்றாய் ஓட அந்த வயதான குழந்தைகள் காப்பகத்தின் காப்பாளரான ஷியன்சியை தன் கைப்பேசியில் அழைத்தாள் ஷகுரா. ” சொல் என் அன்பு மகளே ஷகு டார்லிங். செர்ரி மலர்களைப் பார்த்ததும் எனக்கு உன் நினைவாகவே இருக்கிறது. இந்த அழகான மலர்களைப் போல் என் செல்லக் குழந்தை எவ்வளவு அழகாக வளர்ந்துContinue reading “ஷகுரா அத்தியாயம்–3”
Category Archives: கவிதைகள்
கனடாவில் இன்று தேர்தல்
இன்று கனடாவில் தேர்தல் நாள் முக்கியமான ஐந்து கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரத்தை பாரபட்சமின்றி கடந்த மூன்று மாதங்களாக தொலைகாட்சியில் ஒலி பரப்பினார்கள். தினமும் செய்திகளில் ஐந்து கட்சிகளின் தலைவர்களும் நேர் எதிர் நின்று ஒருவர் கேள்விக்கு மற்றவர் பதிலளித்து விவாதித்ததை மக்கள் தொலைக்காட்சிகளில் கண்டோம். தேர்தலுக்கு ஆகும் செலவுத் தொகையை குறித்தும் விவாதித்தார்கள். எதிர்காலத்தில் நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களின் வாழ்க்கை தரம் உயர்வதற்கும் அவரவர் வழிகளை அவரவர் பாணியில் எடுத்துரைத்து செய்வதாக வாக்குறுதியும் அளித்தார்கள்.
அன்பு செய்வது எப்படி
அன்பு என்றால் என்ன?நீ சாப்பிட நான் சமைப்பதா?அல்லது நான் சாப்பிட நீ சமைப்பதா?அல்லது இருவரும் சாப்பிட வேறு யாராவது சமைத்து தருவதா?நீ உண்ண, உறங்க, இன்பம் துய்க்க நான் வீட்டில் எல்லா வேலைகளையும் செய்து பொருளும் ஈட்டி குழந்தைகளையும் பெற்று வளர்த்து பேணி காத்து குடும்ப குத்து விளக்காக இருப்பது தான் அன்பு செய்வதா?வீட்டில் இருப்பதை பகிர்ந்து அனைவருக்கும் கொடுத்து விட்டு வயிற்றில் பசியோடும் பிள்ளையோடும் உன் கவலைகளைப் போக்க நான் சலித்தால் வேறு பெண்களை நாடிச்Continue reading “அன்பு செய்வது எப்படி”
கள்வனின் கூட்டாளிகள்.
காலைப் பனியில் நனைந்த ரோஜாக்களின் அழகில் மயங்கி கண்கள் மூடி அதன் அருகே சென்றேன்என் முகத்தில் பன்னீரைத் தெளித்து என்னைச் சிலிர்க்க வைத்தது!!குளித்தவுடன் நீர் சொட்டச் சொட்ட உன் தலையை என் முகத்தருகே கொண்டு வந்து ஆட்டுவாயே அப்போது என் மேனியில் ஏற்படும் அதே சிலிர்ப்புஇப்படித் தலையாட்ட இந்த ரோஜாக்களுக்கு எப்படி தெரிந்தது!!நீ தான் சொல்லிக் கொடுத்தாயா என் இதய ராஜா♥️ கீச் கீச் என்று கூவிக் கொண்டு மலருக்கு மலர் தாவித் தாவி தேன் எடுக்கும்Continue reading “கள்வனின் கூட்டாளிகள்.”
ஷகுரா–அத்தியாயம்–2
ஜப்பானிய பெண்ணான சூயி க்கும் கொரியாவைச் சேர்ந்த ருன்யு என்ற ஆண் மகனுக்கும் ஏற்பட்ட காதலில் மலர்ந்த அழகு மலர் தான் ஷகுரா. ஷகுராவின் அம்மா தன் மகளுக்கு ஜப்பானியர்கள் அனைவருக்கும் பிடித்த மலரான ஷகுரா என்ற மலரின் பெயரையே தன் மகளுக்கும் சூட்டினாள் . செர்ரி மலர்களைத் தான் ஜப்பானிய மொழியில் ஷகுரா என்று அழைப்பார்கள். அழகான தங்கள் காதலுக்கு அச்சாரமாக இளவேனில் காலத்தில் தொட்டால் சிவக்கும் இளஞ்சிவப்பு நிறத்தில் பொம்மை போல அழகாக பிறந்தContinue reading “ஷகுரா–அத்தியாயம்–2”