குறிஞ்சிப்பூ.ஔவை பாடிய அகவன் மகளே அடி எனதருமை கட்டுவிச்சி ( குறி சொல்பவள் ) நீ பாடிய பாட்டை மீண்டும் மீண்டும் பாடடி உன் பாட்டில் அவர் இருக்கும் நன்னெடுங் குன்றம் பெயரையாவது என் செவிகள் கேட்கட்டும். பாடடி என் கட்டுவிச்சி முல்லைப்பூ. புதுப்பூங்கொன்றைப்பூத்தது. புதுமாரிக் காலம் வந்தது என்று ஊரார் உரைத்தாலும் யான் தேறேன்.சரக்கொன்றை பூக்கும் முன் சாரல் மழை பெய்யும்முன் வருவேன் என்றார். அவர் பொய் வழங்கலரே என் தோழி. மருதப்பூ. கண்ணீரில் கரைவதையும்Continue reading “ஐந்திணையிலும் தலைவனைப் பிரிந்த தலைவியின் துயரம்”
Category Archives: கவிதைகள்
ஐந்து நிலங்களிலும் தலைவியைப் பிரிந்த காதல் தலைவன் படும்பாடு
கொங்குத் தேன் அருந்தும் குறிஞ்சி நிலத்து அழகிய வண்டே நீ அறிந்த மலர்களுள் என்னவள் கூந்தல் போல நறுமணமுள்ள மலர்களை நீ நுகர்ந்ததுண்டா? அசைகின்ற மூங்கில் தோளழகுஅலைபாயும் அகண்ட சேல் அழகு. வெகு தூரத்தில் அங்கே நீபசுமையான அகன்ற வயலிருந்தும் ஓர் ஏருள்ள உழவன் போல அவசரத்தில் தவிக்கிறேனடி இங்கே நான். மருதநிலத்து மாது ஒருத்தி உன் அடிமை நான் என்றே புறம்பேசிப் பழிக்கிறாள் என்னை. ஏழேழு ஜென்மத்திலும் நீயே என் ஆவிக்கிளியென்று அவள் எப்படி அறிவாள்Continue reading “ஐந்து நிலங்களிலும் தலைவியைப் பிரிந்த காதல் தலைவன் படும்பாடு”
வாழ்கின்ற தொல் தமிழரின் வரலாறு
மேல் சட்டை போடக்கூடாது என்றுமேனியில் சூடு போட்டார்கள்.கோட்டு சூட்டுப் போட்டுகோடிக்கணக்கான எம்மவர்க்கு குலதெய்வமானாய்எம்மான் நீ வாழியவே♥️🙏 இடுப்பில் துண்டு கட்டி கும்பிடச் சொல்லி முதுகெலும்பை வளைத்தார்கள்“கும்பிடறேன் சாமி” என்று என் பெயரைச் சொல்லி நிமிரவைத்த என் நெருப்பு நிலாவே நீ வாழியவே🙏♥️ தோளில் துண்டும் காலில் செருப்பு போட்டால் கசையடி கொடுத்தார்கள்அடித்தவர்கள் நொறுங்கும் படி சட்டக் கல்வி படித்து பட்டயங்கள் பல வாங்க வைத்த என் செம்மலே நீ வாழியவே♥️🙏 அண்ணலின் பாதையில் நாங்கள் மிடுக்கோடு நடந்துContinue reading “வாழ்கின்ற தொல் தமிழரின் வரலாறு”
விதி வலியது
வாழ்க்கை நதி நீண்டதுவாங்கி வந்த காலம் ஓடுது வந்ததெல்லாம் வரவென்றானதுபோவதெல்லாம் செலவென்று போகுது சிந்தனை மாறுதுசித்தம் கலங்குது சிறுமதி தோற்குதுபெரும் விதி விளையாடுது சல்லிக்காசு இல்லை என்றால் உயிர் இருந்தாலும் வாழ்க்கை ஊசலாடுது சவமானாலும் சாதிப்பேய் ஆடுது இறைவா இதுதான் விதியாஉணர்ந்ததால் நீயும் கல்லானாயோ!!! விதி வலியது தானோ!!! கோமகள் குமுதா
வாய் சிவந்தது எப்படி பச்சைக்கிளியே
வெற்றிலை போடவில்லைவிதவிதமான சாயம் பூசவில்லைவேண்டியவர் எவரும் கொடுத்தாரோ !!!!எப்படிச் சிவந்தது !!!என் ஆசை பச்சைக்கிளியே கோமகள் குமுதா