வாழ்கின்ற தொல் தமிழரின் வரலாறு

மேல் சட்டை போடக்கூடாது என்று
மேனியில் சூடு போட்டார்கள்.
கோட்டு சூட்டுப் போட்டு
கோடிக்கணக்கான எம்மவர்க்கு குலதெய்வமானாய்
எம்மான் நீ வாழியவே♥️🙏

இடுப்பில் துண்டு கட்டி கும்பிடச் சொல்லி முதுகெலும்பை வளைத்தார்கள்
“கும்பிடறேன் சாமி” என்று என் பெயரைச் சொல்லி நிமிரவைத்த என் நெருப்பு நிலாவே நீ வாழியவே🙏♥️

தோளில் துண்டும் காலில் செருப்பு போட்டால் கசையடி கொடுத்தார்கள்
அடித்தவர்கள் நொறுங்கும் படி சட்டக் கல்வி படித்து பட்டயங்கள் பல வாங்க வைத்த என் செம்மலே நீ வாழியவே♥️🙏

அண்ணலின் பாதையில் நாங்கள் மிடுக்கோடு நடந்து செல்ல புதிய பாதை போட்ட என் ராஜாங்கமே நீ வாழியவே♥️🙏

பெரியாரின் கொள்கைகளை படித்து கொண்டிருக்காமல் வாழ்ந்து காட்டும் என் கோமகனே நீ வாழியவே♥️🙏

கீழடியில் தோண்டத் தோண்ட கிடைக்கும் எம் வீட்டுச் சோற்றுப் பானையே
தமிழரின் வரலாற்றை மாற்றி எழுத வந்த என் வல்லரசே நீ வாழிய வாழியவே.🙏♥️

கோமகள் குமுதா 🙏
படம் சகோதரர் Ponvannan அவர்கள் வரைந்தது.🙏🙏

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: